Vijay: ட்விட்டரில் ட்ரெண்டாகும் தளபதி 50.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தொடர்ந்து ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளன. இந்த படங்களுடன் விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். அதனால் இந்த இரு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இதனிடையே, தளபதி 50 என்ற ஹேஷ்டாக்கும் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கள் உள்ளது. அடுத்தமாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. இதனிடையே தளபதி 69 பட அறிவிப்பும் அன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 48வது படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் போர்ஷன்கள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக படத்தின் டப்பிங் வேலைகளில் அவர் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடிகர் விஜய்யின் கோட் பட இறுதி கட்ட சூட்டிங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 23 மற்றும் 24 தேதிகளில் இந்த படத்தின் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. விஜய் நடித்திருந்த ஆக்சன் காட்சிகளின் பேட்ச் வேலைகள் இதன்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சூட்டிங்கை நிறைவு செய்த விஜய்: இதையடுத்து விஜய் படத்தில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார். விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் முன்னதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த சூழலில் தற்போது மீண்டும் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார். தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 50 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. வரும் ஜூன் மாதம் 22ம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாட உள்ள சூழலில் தளபதி 50 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
தளபதி 50 ஹேஷ்டேக்: இந்த பிறந்தநாளில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது போல தளபதி 69 படத்தின் அறிவிப்பும் அன்றைய தினம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் விஜய்யின் இந்த ஐம்பதாவது பிறந்த நாள் அவரது அரசியலை பயணத்தையும் சேர்த்து மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தளபதி 50 ஹேஷ்டேக்கில் தொடர்ந்து ரசிகர்கள் விஜய்யின் வீடியோக்கள், படக் காட்சிகள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகின்றனர்.

செப்டம்பர் 5ல் ரிலீஸ்: முன்னதாக விஜய்யின் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூற்பபட்டுள்ளது. இதனிடையே 10 மற்றும் 12ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே கோட் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பணிகளில் படக்குழுவினர் மிக பிசியாக செயல்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











