சர்கார் ஆக்டிங் ஓவர், டப்பிங் ஓவர் அடுத்து ரிலீஸ்தானுங்கண்ணா
சர்கார் பட வேலைகளை விஜய் நிறைவுசெய்துள்ளார்
சென்னை: சர்கார் படத்திற்கான விஜய்யின் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் சர்கார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

அமெரிக்கா, சென்னை என படக்குழுவினர் பறந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் சர்கார் படத்தில் தன்னுடைய பகுதியை முடித்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் விஜய் இப்படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்தார். டப்பிங் பணி முடிந்துவிட்டதால் விஜய்க்கு எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சர்கார் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர்.ரகுமானுடன் ஆளப்போறான் தமிழன் புகழ் பாடலாசிரியர் விவேக் மீண்டும் இணைந்துள்ளார். சன் பிச்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











