twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்கா என்று அழுத விஜய்... விவேக் மனைவிக்கு கண்ணீர்மல்க ஆறுதல்.. வெளியான நெகிழ்ச்சி தகவல்!

    |

    சென்னை: அக்கா என்று அழுதப்படி விவேக் மனைவிக்கு ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக். கடந்த 16ஆம் தேதி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

    நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. நடிகர் சூர்யா உருக்கம்! நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. நடிகர் சூர்யா உருக்கம்!

    இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அங்கு அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    நடிகர் விவேக் மரணம்

    நடிகர் விவேக் மரணம்

    ஆனாலும் ஆபத்தான நிலையில் இருந்த நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 59 வயதே ஆன நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் சினிமாவையும் சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அரசியல் தலைவர்கள் இரங்கல்

    அரசியல் தலைவர்கள் இரங்கல்

    தனது நகைச்சுவை மூலம் சமுதாயத்திற்கான சீர்திருத்த கருத்துக்களை கூறி வந்த விவேக், சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் தவைர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    மரக்கன்றுகள் நட்டு

    மரக்கன்றுகள் நட்டு

    அவரது உடலுக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவாக பல இடங்களில் ரசிகர்களும் திரைத்துறை நட்சத்திரங்களும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

    பங்கேற்க முடியவில்லை

    பங்கேற்க முடியவில்லை

    இந்நிலையில் விவேக்குடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் விஜய் அப்போது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார். இதன் காரணமாக நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

    நாடு திரும்பிய விஜய்

    நாடு திரும்பிய விஜய்

    இந்நிலையில் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்த நடிகர் விஜய் கடந்த 25 ஆம் தேதி ஜார்ஜியாவில் இருந்து நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    குடும்பத்தினருக்கு ஆறுதல்

    குடும்பத்தினருக்கு ஆறுதல்

    ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய அடுத்த நாளே நடிகர் விஜய் நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மனைவியிடம் விஜய் பேசியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    Vivekh படம் போட்ட Postal Stamp | மத்திய அரசின் புது முயற்சி | PM Modi
    அக்கா என கண்ணீர்..

    அக்கா என கண்ணீர்..

    அதாவது விவேக்கின் மனைவியை பார்த்ததுமே அக்கா என கண்ணீர்விட்டு அழுதுள்ளார் விஜய். விஜய்க்கும் விவேக்கிற்கும் நீண்ட கால நட்பு இருந்ததால் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துள்ளார் விஜய்.

    என்ன வேண்டுமென்றாலும்..

    என்ன வேண்டுமென்றாலும்..

    விவேக்கின் மகள்களுக்கும் நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய், விவேக் மனைவியிடம் அக்கா என்று அழுத தகவல் வைரலாகி வருகிறது.

    ஹேஷ்டேக் ட்ரென்ட்

    ஹேஷ்டேக் ட்ரென்ட்

    நடிகர் விவேக் விஜய்யுடன் சேர்ந்து ஷாஜகான், உதயா, யூத், பத்ரி, ஆதி, நேருக்கு நேர், திருமலை, பிரியமானவளே, குஷி, குருவி, தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்திலும் நெஸி என்ற கதாப்பாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் விவேக்.

    English summary
    Actor Vijay cried to Vivek's wife. Vivek passed away on 17th of last month. Vijay met his family on 26th of last month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X