Actor Vijay: திரிஷாவுடன் சென்னையில் ஆட்டம்போட்ட விஜய்.. அப்படி போடு லெவலுக்கு இருக்குமா?

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் மாஸ்கோவில் இறுதி கட்டமாக நடந்து முடிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், லைலா, சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷாவும் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஜோடி போட்டு நடித்திருந்தனர். படத்தில் இவர்களுக்கு லிப் லாக் சீனும் இருந்தது. கணவன் மனைவியாக இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு பெற்றோராக இந்த படத்தில் இவர்கள் நடித்திருந்தனர். இருந்த போதிலும் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் கோட் படத்தில் இருவரும் இணைந்து பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actor Vijay dance with Trisha for The greatest of all time movie song shoot

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறுதி கட்டமாக நடந்து முடிந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு விஜய் நாடு திரும்பினார். முன்னதாக மக்களவைத் தேர்தலின் போது அவர் மாஸ்கோ சூட்டிங்கிற்கு கிளம்பியதால் அவர் தேர்தலில் வாக்களிப்பாரா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பின. ஆனால் முன்னதாகவே கோட் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு விஜய் சரியாக மக்களவைத் தேர்தல் நடந்த தினத்தன்று காலை சென்னை திரும்பி அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

மாஸ்கோவில் இறுதிக்கட்ட சூட்டிங்: தொடர்ந்து தன்னுடைய வாக்கையும் பதிவு செய்தார். விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி 69 படங்களை முடித்துவிட்டு தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் முன்னதாக விஜய் அறிவித்துள்ளார். அவரது வெறித்தனமான ரசிகர்களுக்கு அவரது சினிமா விலகல் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியபோதிலும் அவரது அரசியல் என்ட்ரி அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

சென்னையில் பாடல் சூட்டிங்: மாஸ்கோவில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டின் நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஒரு சில பேட்ச் ஒர்க் வேலைகளை தற்போது படக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். விஜய் மற்றும் திரிஷாவின் பாடல் காட்சி ஒன்றின் ஷூட்டிங் சென்னையில் முன்னதாக நடத்தப்பட்டது இந்நிலையில் இந்த பாடலில் விடுபட்ட சில காட்சிகளின் சூட்டிங் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களில் இதன் சூட்டிங் நடத்தி முடிக்கப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளில் 2வது சிங்கிள்: படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகியுள்ள சூழலில் அடுத்ததாக ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது விஜய் மற்றும் திரிஷாவின் பாடலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது விஜய் -திரிஷாவின் நடிப்பில் கில்லி படம் ரீ ரிலீசாகியுள்ள சூழலில், படத்தின் அப்படி போடு பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய் -திரிஷாவின் கோட் பட பாடலும் அதே போன்ற கொண்டாட்டத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பாடலுக்கு யுவனின் இசை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த பாடலுக்காக தற்போதே ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X