jana nayagan : மேடையில் மாஸ் காட்டிய விஜய்.. இயக்குநர்கள் செம குஷி!
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பல்லாயிரகணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து இசை வெளியீட்டு விழாவை கண்டுரசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு
விஜய் சூட் கோட் அணிந்து கொண்டு 'ரம்ப் வாக்' நடந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி மேடையில் நடனமாடினார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் நேற்றே தனி விமான மூலம் மலேசியாவிற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதியம் மூன்று மணி அளவில் தொடங்கிய இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அஞ்சனா மற்றும் ரியோ ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தளபதி கச்சேரி: இது இசை வெளியீட்டு விழாவாக இல்லாமல் தளபதி கச்சேரி என்ற கான்செப்ட்டாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி. சரண், நடிகை ஆண்ட்ரியா அனைவரும் மேடையில் விஜயின் படங்களிலிருந்து ஹிட் பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த மேடையில் விஜய்யின் அம்மா சோபனா சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
மேடையில் கிளாஸ் நடனம்: பின் நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய் கோட் சூட் அணிந்தபடி 'ரேம்ப் வாக்' கில் வந்து ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். விஜயின் மாஸ் என்ட்ரியை பார்த்து ஒட்டுமொத்த கூட்டமும் திக்குமுக்காடி போனது. இதையடுத்து, விஜய் வழக்கம் போல ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மேடையில் விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும், இணையத்தில் அனைவரும் சேர்ந்து நடனமாடுவது போல ஏஐ போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











