பிறந்தநாளும் அதுவுமா ரசிகர்களுக்கு இப்டியா ‘ஐஸ்’ வைக்கிறது விஜய்!

நடிகர் விஜய் தேவரகொண்டா சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

சென்னை: தன் பிறந்தநாளை ரசிகர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

அர்ஜூன் ரெட்டி மூலம் தெலுங்கிலும், தமிழிலும் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. அதனைத் தொடர்ந்து நோட்டா என்ற நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை.

Actor Vijay Devarakonda celebrated his birthday in Chennai

அப்படம் தோல்வியடைந்த போதும், தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார் விஜய் தேவரகொண்டா. அதையொட்டி தனது ரசிகர்களுக்கு இனிப்பிற்கு பதில் வித்தியாசமாக ஐஸ்கிரீம் கொடுத்து கொண்டாடினார்.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தேவரகொண்டா பர்த்டே ட்ரக் என்ற வண்டி மூலம் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது.

சென்னை அண்ணா நகரிலுள்ள அண்ணா ஆதர்ஷ் கல்லூரி வளாகத்தின் அருகே, தனது ரசிகர்களுக்கு நேரடியாக ஐஸ்கிரீம் வழங்கினார் விஜய். அப்போது, நீங்கள் எனக்கு அதிகப்படியான அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள். நான் இந்த நாளை உங்களோடு இணைந்து கொண்டாட விரும்பினேன். அன்பையும் புன்னகையையும் அதிகமாகப் பகிருங்கள்" என்று அவர் கூறினார்.

மேலும், கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களிலும் ஐஸ்க்ரீம்கள் வழங்கப்பட்டன.

தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'டியர் காம்ரேட்' படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. வரும் ஜூலை 16ம் தேதி அப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி, இப்பட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X