Kushi: விஜய்யின் குஷி பட டைட்டில்.. விஜய் தேவரகொண்டா விருப்பம் என்ன தெரியுமா!
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செம்டம்பர் 1ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது குஷி படம்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமிழிலும் இந்தப் பாடல்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.
படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. காதல் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

விஜய் பட டைட்டிலில் நடிப்பது குறித்து விஜய் தேவரகொண்டா பகிர்ந்த தகவல்: நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்குப்படவுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார். அர்ஜூன் ரெட்டி படம் மூலம் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பெற்ற விஜய் தேவரகொண்டா, தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கும் விஜய் தேவரகொண்டாவை சிறப்பாக அறிமுகப்படுத்தியது.
சமீபத்தில் இவரது லைகர் படம் வெளியாகி, சொதப்பியது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் வசூலிலும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் குஷி படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. படத்தில் சமந்தா ஜோடியாக நடித்துள்ளார். சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
காதல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கான ப்ரமோஷன்களில் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர். தமிழிலும் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தமிழகத்திலும் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, விஜய் -ஜோதிகா நடிப்பில் உருவான குஷி படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்த நிலையில், அந்த தலைப்பில் தானும் நடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தை ரசிகர்கள் அதிகமாக ரசித்ததை போல தன்னுடைய படத்தையும் வெகுவாக ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் இரண்டு படத்தின் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் இணைந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்தனர். தொடர்ந்து சமந்தாவை அலேக்காக தூக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் விஜய் தேவரகொண்டா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











