தென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட ஒரே நடிகர் இவர்தான்!

சென்னை: தென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்வில்லா என்ற படத்தின் முதல் திரையுலகுக்கு அறிமுகமானாவர் விஜய் தேவரகொண்டா.

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புலு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தமிழில் நோட்டா

தமிழில் நோட்டா

அவரது நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப்படம் தமிழ், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் நோட்டா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் விஜய் தேவரகொண்டா.

இந்தியிலும் பிஸி

இந்தியிலும் பிஸி

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது லிகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்தியிலும் தயாராகி வருகிறது. குறைந்த படங்களில் நடித்துள்ள போதும் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.

ஆஃப் ஸ்க்ரீன் போட்டோஸ்

ஆஃப் ஸ்க்ரீன் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள விஜய் தேவரகொண்டா, அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

12 மில்லியன் ஃபாலோயர்ஸ்

12 மில்லியன் ஃபாலோயர்ஸ்

இந்நிலையில் தென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 12 மில்லியன்களை கடந்துள்ளது.

பேஸ்புக்கிலும் அதிகம்

பேஸ்புக்கிலும் அதிகம்

இதேபோல் பேஸ்புக்கிலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக உள்ளார் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டாவுக்கு அடுத்தப்படியாக 11.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் அல்லு அர்ஜூன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பூரி ஜெகன்னாத்

பூரி ஜெகன்னாத்

அவருக்கு அடுத்தப்படியாக மகேஷ் பாபு 6.7 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்னாத்தின் லிகர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அனன்யா பாண்டே லீடிங் ரோலில் நடித்து வருகிறார்.

செப்டம்பர் 2 ரிலீஸ்

செப்டம்பர் 2 ரிலீஸ்

மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், அலி, மார்கண்ட் தேஷ்பாண்டே, கெட்டப் சீனு, அப்துல் காதர் அமீன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X