Vijay devarakonda: தன் காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. கூடவே அந்த பதிலும்
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய காதலியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய காதலி யார் என்பது பற்றிய முழு விவரமும் விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

அதுபோல இன்று மாலை ரசிகர்களின் கேள்விகளுக்கு தான் பதில் அளிப்பதாகவும் கூறி இருக்கும் விஜய் தேவர் கொண்டாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
2கே ஹிட்ஸ்களின் கனவு காதலனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா ஒரு நடிகராக மட்டுமே தெரிந்த நிலையில் அவர் சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழையும் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா ஃபிலிம் பேர் விருது, நந்தி விருது, சினிமா விருது போன்ற பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார்.
சினிமாவின் மூலமாக இன்ஸ்டாகிராமிலும் அதிகமான ரசிகர்களை ஃபாலோவர்ஸ்களாக கொண்ட நடிகர் என்ற பெருமையும் விஜய் தேவரகொண்டா பெற்று இருக்கிறார். விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தா, டாக்ஸி வாளா போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நோட்டா, டியர் காம்ரேட் போன்று அவர் நடித்த அந்த படங்கள் தமிழிலும் வெளியானது. அதன் மூலம் இவருக்கு அளவுக்கு அதிகமான தமிழ் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.
இவர் ஒரு நடிகராக இருக்கும் நிலையிலும் 500 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அதுபோல தன்னுடைய கிங் king of the hill என்ற ப்ரொடக்ஷன் மூலமாக பல புதுமுக நடிகர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.. இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவோடு இவர் இணைந்து நடித்த குஷி திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அதில் என் வாழ்க்கையில் முழு சந்தோஷம் என்று கூறி விரைவில் இதுகுறித்து அப்டேட் கொடுப்பேன் என்று வெளியிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு பல பெண் ரசிகைகள் மனதை கஷ்டப்படுத்தி இருந்தாலும் ஆண் ரசிகர்கள் அப்பாடா என்று சொல்லியபடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் தேவரகொண்டாவின் காதலி யாராக இருக்கும் என்றும் கேள்விகள் குவிந்து வருகிறது. அதுபோல இன்று ரசிகர்களின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க போவதாகவும் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











