Vijay Devarakonda & Rashmika: விஜய் ட்ரெஸ்ஸை அணிந்து வந்த ராஷ்மிகா.. கண்டுபிடித்த ரசிகர்கள்!
ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையில் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் மூச்சுவிடாமல் மௌனம் காத்து வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்தக் காதலை வெளிப்படுத்தி வருகின்றன.

இருவரும் தொடர்ந்து வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர். சமீபத்தில் தீபாவளியை விஜய் தேவரகொண்டா வீட்டில்தான் ராஷ்மிகா கழித்ததாக தகவல்கள் வெளியாகின.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா: நடிகர் விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாகவும் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இணைந்து நடித்தனர். இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தன. இந்நிலையில் அவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இதை நிரூபிக்கும்வகையில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இவர்களின் காதலை வெளிப்படுத்தி வருகிறது.

விடுமுறை கொண்டாட்டங்கள்: வெளிநாடுகளிலும் இவர்கள் இருவரும் விடுமுறைக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தொடர்ந்து ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையையும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா வீட்டில்தான் கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த காதல் குறித்து இருவரும் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.

ஒரே மாதிரியான உடை: ஆனாலும் இவர்களின் காதல் விவகாரத்தை தொடர்ந்து பல புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் சளைக்காமல் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரத்தில் மேலும் ஒரு சாட்சிகளை தற்போது ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே உடையில் பொதுவெளியில் வந்ததையும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க விஜய் தேவரகொண்டா ஒரு Hoodie அணிந்து வந்திருந்தார்.

காதலை உறுதி செய்யும் ரசிகர்கள்: சாண்டல் கலரில் அந்த Hoodie ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இதே உடையில் தற்போது ஏர்போர்ட்டிற்கு வந்த ராஷ்மிகாவை பார்க்க முடிந்தது. இந்த இரு புகைப்படங்களையும் கம்பேர் செய்து தற்போது இவர்கள் காதலை மேலும் ரசிகர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர். இது விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஆடை நிறுவனமான RWDY நிறுவனத்தின் ஆடையாகும். இருவரையும் ஒரே உடையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா கெமிஸ்ட்ரி: இருவரும் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உளளது. இதனிடையே, இருவரும் தங்களது கேரியரில் அடுத்தடுத்த பெஸ்ட் படங்களை கொடுத்து வருகின்றனர். ராஷ்மிகாவின் அனிமல் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. இதனிடையே தமிழ், தெலுங்குப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.


Click it and Unblock the Notifications











