அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய் தேவரகொண்டா... உருவாகிறது சூப்பர் ஹிட் படத்தின் 3வது பாகம்!
சென்னை : தென்னிந்தியாவை தொடர்ந்து இப்பொழுது இந்தியா முழுவதும் அனைவராலும் அறியப்படும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் லைகர் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.
விரைவில் பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க இருக்கும் விஜய் தேவரகொண்டா இப்பொழுது பிரபல சூப்பர் ஹிட் திரைப்படத்தின் 3வது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிறந்த நடிகராக
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று வர இப்பொழுது தென்னிந்திய அளவில் அனைவராலும் ரசிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகராக மாறியுள்ளார்.

முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரராக
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், அர்ஜுன் ரெட்டி என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற தமிழ் சினிமாவிற்கு நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டாவுக்கு கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பிரம்மாண்ட கூட்டணியில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் லைகர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் தேவரகொண்டா முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரராக நடிக்க பிரபல முன்னணி இயக்குனர் பூரி ஜெகநாத் படத்தை இயக்கி வருகிறார். நடிகை சார்மி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோகர் இப்படத்தை இணைந்து தயாரித்து வருகின்றனர்

ஆர்யா 3
கடந்த 2004ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமாரர் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆர்யா வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் 2009ஆம் ஆண்டு வெளியானத்து. ஆர்யா இரண்டும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்த சூழலில் தற்போது ஆர்யா பாகம்-3 உருவாக உள்ளது.

அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய்தேவரகொண்டா
முதல் இரண்டு பாகங்களை இயக்கிய சுகுமார் மூன்றாவது பாகத்தையும் இயக்க தயாராகி வருகிறார். அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் இப்பொழுது புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆர்யா மூன்றில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய்தேவரகொண்டா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
இயக்குனர் சுகுமார் இப்போது புஷ்பா படத்தை இயக்கி வருகிறார் அதேசமயம் விஜய் தேவர்கொண்டா லைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தங்களது படங்களை முடித்துவிட்டு அடுத்த அடுத்ததாக ஆர்யா 3ல் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











