Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் கவலை..
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் டெங்கு காய்ச்சல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் தேவர கொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல் என்ற தகவல் இணயத்தில் தீயாக பரவி வருகிறது.
அவர், கிங்டம் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

மருத்துவர்கள் விஜய் தேவரகொண்டாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், டெங்கு காய்ச்சலால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ளது. ஜூலை 20, 2025 அன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடு திரும்பிய பிறகும், அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிங்டம் படத்தின் புரோமோஷன் வேலைகள் இருப்பதால் அவர் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதும் பலரது கேள்வியாக உள்ளது. பலரும் விஜய் தேவரகொண்டா முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.
ஹேஷ்டெக்: Entertainment AF என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் முதலில் இந்த செய்தியை வெளியிட்டது. சமூக ஊடகங்களில் Vijay Deverakonda மற்றும் Kingdom என்ற ஹேஷ்டேக்குகளுடன் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளனர். பல செய்தி நிறுவனங்களும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
கிங்டம்: விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் நடித்துள்ள கிங்டம் திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவரது உடல்நலப் பிரச்சினை படத்தின் விளம்பரப் பணிகளை பாதிக்கலாம் என்ற கவலை படக்குழுவினர் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், அவர் விரைவில் குணமடைந்து விளம்பரப் பணிகளில் மீண்டும் இணைவார் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications











