கிங்டம் படத்துக்கு தடை.. ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்.. ஆடியில் அடுத்தடுத்து அடி வாங்குறாரே!
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டு ஆடி மாதம் ஒத்து வரல போல. அடுத்தடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த ஜூலை 31ஆம் தேதி ரிலீஸ் ஆன இவரது கிங்டம் படம் இலங்கைத் தமிழர்களின் ஈழப்போராட்டத்தை தவறாக சித்தரிப்பதாக கூறி தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசு சார்பில் தடை விதிக்கவில்லை என்றாலும் பெரும்பாலான தமிழ்நாடு தியேட்டர்களில் பல தியேட்டர்களில் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. இது கிங்டம் படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்னை இருக்க, ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் விஜய் தேவரகொண்டா நடித்ததற்காக ஹைதரபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். பெட்டிங் ஆப்பில் நடிகர் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி உள்ளிட்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது, பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், ஸ்ரீமுகி, சியாமளா, யூடியூபர்கள் ஹர்ஷா சாயி, பையா சானி யாதவ், நானி உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பலர் இதில் சிக்கி, பணத்தை இழந்து, தங்கள் சேமிப்புகளை இழந்து, அதிகப்படியான கடனை வாங்கி, ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் அதை முழுவதுமாக நடைமுறைப் படுத்த முடியாத சூழல் உள்ளது. ஆன்லைனில் பெட்டிங் கேம் விளையாடலாம் என்று வெகு சில மக்களுக்கே தெரிந்து வந்தாலும், பிரபலங்கள் இந்த சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த பின்னரும் தொடர்ந்து நடிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தடை முயற்சி: தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், நடிகர் சரத்குமார் இந்த விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், சூதாட்ட செயலிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சம்மன் மற்றும் ஆஜர்: அதன் அடிப்படையில் தான், பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், ஸ்ரீமுகி, சியாமளா, யூடியூபர்கள் ஹர்ஷா சாயி, பையா சானி யாதவ், நானி உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் இன்று அதாவது ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











