twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேமஸ் லவ்வர் ஃபிளாப்.. தயாரிப்பாளர் பரபரப்பு புகார்... பாதி சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்தாரா ஹீரோ?

    By
    |

    சென்னை: படம் தோல்வி அடைந்ததை அடுத்து, தனது சம்பளத்தில் பாதியை ஹீரோ திருப்பிக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

    விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். தெலுங்கு, தமிழில் வெளியான இந்தப் படத்தில் 4 கெட்டப்பில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.

    அவர், ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

    காதலர் தினத்தன்று

    காதலர் தினத்தன்று

    கிராந்தி மாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆனது. கே.எஸ்.ராமாராவ் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.
    படத்தின் டீசர் வெளியானதுமே, இது அர்ஜூன் ரெட்டி படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

    தவறான சாய்ஸ்

    தவறான சாய்ஸ்

    இந்நிலையில் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாள் இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் இருந்தது. ஆனால், அடுத்த நாள் பாதியாக சரிந்த வசூல், பிறகு மொத்தமாக சரிந்தது. எதிர்பார்ப்புள்ள ஹீரோ, விஜய் தேவரகொண்டா இதுபோன்ற கதைகளில் நடிக்கக் கூடாது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தனர். இது தவறான சாய்ஸ் என்றும் கூறினர்.

    வினியோகஸ்தர்கள்

    வினியோகஸ்தர்கள்

    இந்தப் படம் ரூ.30 கோடிக்கு விற்கப்பட்டதாம். ஆனால், மொத்தமாக ரூ.10 கோடி மட்டும்தான் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தயாரிப்பாளரிடம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்த பிரச்னை டோலிவுட்டில் பரபரப்பாகியுள்ளது.

    அவரே இயக்கினார்

    அவரே இயக்கினார்

    இந்நிலையில், இந்த படத்தின் கதையில் ஹீரோ விஜய் தேவரகொண்டா தலையிட்டு மாற்றினார் என்றும் சில காட்சிகளை அவரே இயக்கினார் என்று தகவல்கள் வெளியாயின.இதை அந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 'அவர் கதையில் தலையிட்டதால்தான் படம் தோல்வி அடைந்தது. விஜய் தேவரகொண்டா வுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி, ரூ.8 கோடி கொடுத்தேன். ரிலீஸ் நேரத்தில் ரூ.2 கோடி பாக்கிக்காக, என் வீட்டை எழுதி கொடுத்தேன்.

    சம்பளத்தில் பாதி

    சம்பளத்தில் பாதி

    இப்போது படம் தோல்வி. விநியோகஸ்தர்கள் என்னிடம் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். தோல்விக்கு அவர் காரணம் என்பதால் என்னிடம் வாங்கிய வீட்டை திருப்பித் தரவேண்டும். அப்போதுதான் நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்று கூறி இருந்தார். இந்நிலையில் அவர் தனது சம்பளத்தில் பாதியை திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    English summary
    sources are to be believed, the Vijay Devarakonda has returned almost half of his remuneration to producer KS Rama Rao upon the latter’s insistence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X