Nanban :நடுக்கடலில் படகில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ.. விஜய்யுடன் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

சென்னை : நடிகர் விஜய் முன்னணி இயக்குநர்கள் பலருடன் கூட்டணி சேர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார்.

ஷங்கர், அட்லி உள்ளிட்டவர்கள் இயக்கத்தில் பல படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக லியோ படத்தில் விஜய் கூட்டணி சேர்ந்துள்ளார்.

Actor Vijay -Director Shankar and teams behind the scenes video released

நண்பன் குழுவினருடன் விஜய் படகு சவாரி : நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய தன்னுடைய ஹீரோயிச பயணத்தை தற்போது வரை 30 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறார். பல முன்னணி இயக்குநர்களுடனும் முன்னணி நாயகிகளுடனும் அவர் கூட்டணி அமைத்து தன்னுடைய படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்துள்ளார். சில படங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ள போதிலும், ஒவ்வொரு படத்திற்கும் அவரது பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

தேர்ந்த இயக்குநர்களுக்கு மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கும் தன்னுடைய படங்களை இயக்க விஜய் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். அவர்களில் சிலர் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி விஜய்க்கு மேலும் சிறப்பை சேர்த்து வருகின்றனர். சிலர் சொதப்பலான டைரக்ஷனையும் கொடுத்து வருகின்றனர். எதுவாக இருந்தபோதிலும் அவர்கள் மீது விஜய் நம்பிக்கை வைத்து சிறப்பான பர்பார்மென்சை கொடுக்க தவறுவதில்லை.

Actor Vijay -Director Shankar and teams behind the scenes video released

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. காஷ்மீரில் 50 நாட்கள் படத்தின் சூட்டிங் கடுமையான குளிரில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். அடுத்த வாரத்தில் அர்ஜுன் இந்த சூட்டிங்கில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பன் படத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்தார் விஜய். மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. படத்தில் விஜய்யின் நண்பர்களாக ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இயக்குநர்கள் ஷங்கர், அட்லி, விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் நண்பன் படக்குழுவினரின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. நடுக்கடலில் இவர்கள் அனைவரும் படகில் செல்வதாக இந்த வீடியோ காணப்படுகிறது.

Actor Vijay -Director Shankar and teams behind the scenes video released

நண்பன் படத்தின் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் அட்லி. இவர் அதை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கி முடித்து ஹாட்ரிக் வெற்றியையும் கொடுத்துவிட்டார். அடுத்ததாக விஜய் 68 படத்தையும் இவர்தான் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் இயக்கத்தில் தனது 68வது படத்தில் விஜய் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X