இலங்கையில் 90 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தானாம்.. மாஸ்டர் படத்தோட வசனம் தான் ஞாபகத்துக்கு வருது!

சென்னை: தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இலங்கையிலும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அங்கே ஆட்டோ ஓட்டுநர் முதல் அனைவருமே விஜய் ரசிகர்கள் தானாம். சொல்லப் போனால், தமிழ்நாட்டை விட அதிக அளவில் விஜய்க்கு அங்கே ரசிகர்கள் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் பேசும் வசனத்தை எடிட் செய்து விஜய் ரசிகர்கள் இலங்கை ரசிகர்கள் பேசிய வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்

பாக்ஸ் ஆபிஸ் கிங்

கமர்ஷியல் படங்களை தொடர்ந்து கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய். அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் அறிமுகமானாலும் தன்னுடைய அயராத உழைப்பின் காரணமாக கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வளர்ந்து நிற்கிறார் விஜய். அவரது உயரத்தை பார்த்து பல பிரபலங்களே மலைத்து போயுள்ளனர்.

இலங்கையில் 90 சதவீதம் பேர்

இலங்கையில் 90 சதவீதம் பேர்

கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. அதை தாண்டி இலங்கை சென்றால், அங்கே விஜய்க்கு 90 சதவீதம் பேர் ரசிகர்களாக உள்ள ஆச்சர்ய தகவல் கோலிவுட்டையே அண்ணாந்து பார்க்க வைத்து இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் விஜய் ரசிகர் தான் என எங்குள்ள ஆட்டோக்காரர்களும் பேசிய வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

100 நாட்கள்

100 நாட்கள்

விஜய் நடித்த படங்கள் எல்லாம் இலங்கையில் 100 நாட்கள் ஓடுகின்றன என்றும் அங்குள்ள ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற முன்னணி நடிகர்களை விட விஜய்க்குத் தான் அங்கே ரசிகர்கள் அதிகம் என்றும், ஒரு சிலர் மட்டுமே மற்ற நடிகர்களின் படங்களை விரும்பி பார்ப்பதாகவும், விஜய் படங்கள் வந்தால் முண்டியடித்துக் கொண்டு படத்தை பார்க்க மக்கள் புறப்பட்டு விடுவர் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா ஃபேமஸ்

நயன்தாரா ஃபேமஸ்

நடிகர் விஜய்யை தொடர்ந்து இலங்கை ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா தான் ரொம்ப பிடிக்குமாம். அங்குள்ள ஆட்டோக்களில் கூட விஜய் மற்றும் நயன்தாரா புகைப்படங்கள் தான் ஒட்டப்பட்டிருக்கின்றன. விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் எல்லாம் இலங்கையில் வேறலெவலில் தியேட்டர்களில் கொண்டாடப்பட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

வாரிசுக்கு வெயிட்டிங்

வாரிசுக்கு வெயிட்டிங்

பிரசவ வலியில் இருப்பதை போன்று விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசுக்காக காத்திருக்கின்றனர். பரபரப்பாக வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க காத்திருக்கிறார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X