Vijay: புஜிக்கு புஜிக்கு.. கன்னத்தை கிள்ளு.. மாஸ்டர் போஸ்.. மாணவர்களுடன் கொஞ்சி விளையாடிய விஜய்!
சென்னை: முதல் தலைமுறை வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு இப்படியொரு விருது விழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் நடிகர் விஜய் என ஒரு பக்கம் ஹேட்டர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
இன்னொரு பக்கம் விருது விழா நிகழ்ச்சியில் மாணவச் செல்வங்களுடன் நடிகர் விஜய் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, அவர்களுடன் பேசி மகிழ்வது, விஜய்யை பார்த்ததுமே மாணவிகள் காலில் விழுவது என கல்வி விழா நிகழ்ச்சியே களைகட்டி உள்ளது.
டைரக்ட் அரசியல்: மறைமுகமாக எல்லாம் சொல்லாமல் நேரடியாக தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை அனைவருக்கும் புரியவைக்கும்படியே நடிகர் விஜய்யின் பேச்சு இருந்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மாணவர்கள் தான் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்றும் ஓட்டுக்கு காசு வாங்கி விட்டு ஓட்டுப் போட்டால் நல்ல தலைவர்கள் வர மாட்டார்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக இன்றைய விருது விழா நிகழ்ச்சியில் பேசி உள்ளார் விஜய்.

தெறிக்கும் டிரெண்டிங்: மாமன்னன் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், ஒரே ஒரு ஆல்டர் ஈகோ பாடல் போஸ்டரை வெளியிட்டே டிரெண்டிங்கை தெறிக்க விட்ட விஜய் இன்று இப்படியொரு மேடை இப்படியொரு விழா கிடைத்தால் சும்மா விடுவாரா.. #VIJAYHonorsStudents என்கிற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
அசுரன் படத்தின் வசனத்தைக் குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசிய பேச்சு மற்றும் விருது விழாவில் மாணவர்களுடன் நடிகர் விஜய் செய்யும் குட்டி குட்டியான க்யூட் சேட்டைகளும் டிரெண்டாகி வருகின்றன.
#ThalapathyVijay @actorvijay 😍😂#VIJAYHonorsStudents 💗 pic.twitter.com/O9ypSqMN2v
— CineFlicks (@cinemamedia7) June 17, 2023
கன்னத்தை கிள்ள விட்ட விஜய்: மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் குட்டி குழந்தைகளும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை தூக்கிக் கொஞ்சுவது, அவர்களை விட்டு தனது கன்னத்தை கிள்ளச் செய்வது என குறும்புத்தனமாக விளையாடி மாணவ மாணவிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார் நடிகர் விஜய்.
அதை பார்த்த ரசிகர்கள் இப்படி நம்முடனும் ஒரு மீட்டிங்கை விஜய் சீக்கிரமே நடத்தி போட்டோ செஷன் வைத்தால் எப்படி இருக்கும் என கோரிக்கைகளை குவித்து வருகின்றனர்.

மாணவர்கள் மகிழ்ச்சி: நடிகர் விஜய்யை இவ்வளவு அருகே அதுவும் அவருடன் விளையாடும் அளவுக்கு வாய்ப்புக் கிடைக்குமா? என்றே நினைக்காத மாணவர்கள் அவருடன் செலவிட்ட அந்த சில நிமிடங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள். மாணவர்களுடன் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியுடன் மோதுவது போல போஸ் கொடுப்பது, மாணவிகளுடன் ஹார்ட்டின் ஷேப் வைப்பது என செம ஜாலியாக குழந்தைகளுடன் விளையாடி வருகிறார் நடிகர் விஜய்.


Click it and Unblock the Notifications











