ஜவான் நிகழ்ச்சியில் விஜய்யின் குட்டி ஸ்டோரி?.. அட்மின் செஞ்ச தரமான சம்பவம்.. எங்கே, எப்போ தெரியுமா?
சென்னை: தளபதி 68 படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு நடிகர் விஜய், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் வெங்கட் பிரபு சென்றிருந்த நிலையில், அங்கே வேலைகளை முடித்து விட்டு இன்று நடைபெற உள்ள ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை 3 மணிக்கு பிரம்மாண்ட ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நடிகர் விஜய்யின் அட்மின் ஜெகதிஷ் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் வருவது கன்ஃபார்ம்: நடிகர் விஜய்யின் அட்மின் மற்றும் தயாரிப்பாளராக மாறியுள்ள ஜெகதிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை 3 மணிக்கு ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்பதை போட்டோவுடன் போட்டு உறுதி செய்துள்ளார்.
நடிகர் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வரும் போட்டோ ஒன்றும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
டிரெண்டிங்கில் நயன்தாரா: ஷாருக்கான் உடன் நாட் ராமைய்யா வஸ்தாவையா பாடலுக்கு ஆட்டம் போட்ட நயன்தாராவின் டான்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. யூடியூபிலும் எக்கச்சக்க மில்லியன் வியூஸை அந்த பாடல் வீடியோ அள்ளி வருகிறது.

குட்டி கதை இன்னைக்கே இருக்குமா?: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா vs கழுகு பஞ்சாயத்து தீப்பற்றிய நிலையில், அதற்கான பதிலடி இன்றைய ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலேயே இருக்குமா என்கிற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால், சமீபத்தில் நடந்த ஐடி விங் ஆலோசனை கூட்டத்திலேயே மற்ற நடிகர்கள் குறித்து தரக்குறைவாக ட்ரோல் செய்யக் கூடாது என விஜய் தரப்பில் இருந்து உத்தரவு வந்த நிலையில், நடிகர் விஜய் அந்த பிரச்சனையை வேறு விதத்தில் டீல் செய்வார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











