twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்க்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல.. கோர்ட் உத்தரவால் குஷியில் தளபதியன்ஸ்..தெறிக்கும் டிவிட்டர்!

    |

    சென்னை: நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வருத்தத்தில் வாரிசு நடிகர்.. புதுசா எந்த படமும் கிடைக்கல.. அந்த தப்பான முடிவால இப்படி மாறிடுச்சே?வருத்தத்தில் வாரிசு நடிகர்.. புதுசா எந்த படமும் கிடைக்கல.. அந்த தப்பான முடிவால இப்படி மாறிடுச்சே?

    இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும், வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை என அட்வைஸ் கூறியது.

    உத்தரவை எதிர்க்கவில்லை

    உத்தரவை எதிர்க்கவில்லை

    இதனைதொடர்ந்து அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் தன் மீதான விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், "நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை.

    ஏற்றுக்கொள்ள முடியாது

    ஏற்றுக்கொள்ள முடியாது

    நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றவர்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்காத நிலையில் தன்னை மட்டும் கடுமையாக விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.

    அரசு பதிலளிக்க உத்தரவு

    அரசு பதிலளிக்க உத்தரவு

    இதையடுத்து, நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ட்ரெண்டிங்கில் டாப்

    ட்ரெண்டிங்கில் டாப்

    விஜய்க்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #MrPerfectThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து விஜய்யை புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது.

    கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்

    கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்

    உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விஜய்யின் ரசிகரான இவர் பதிவிட்டிருப்பதாவது, தர்மம் தான் ஜெய்க்கும்... நியாயம் தான் ஜெய்க்கும்... ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெய்க்கும்... என பதிவிட்டுள்ளார்.

    தளபதிக்கு பழக்கம்

    தளபதிக்கு பழக்கம்

    மற்றொரு ரசிகரான இவர் தளபதி விஜய்க்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல. தன் வாழ்நாளில் போராடி போராடி மட்டுமே இந்த உச்சத்திற்கு வந்திருக்கிறார். "தடைகள் வருவது தளபதிக்கு பழக்கம்.. அதை உடைத்து எரிவதே தளபதியின் வழக்கம்" என குறிப்பிட்டுள்ளார்.

    சிரிப்பால் புதையுங்கள்

    சிரிப்பால் புதையுங்கள்

    மற்றொரு ரசிகரான இவர் உங்கள் வெற்றியின் மூலம் அவர்களை கொல்லுங்கள், உங்கள் புன்னகையின் மூலம் அவர்களை புதையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    பர்ஃபெக்ட் ரோல் மாடல்

    பர்ஃபெக்ட் ரோல் மாடல்

    மற்றொரு ரசிகரான இவர் தளபதி விஜய் எல்லோருக்கும் பர்ஃபெக்ட் ரோல் மாடல்.. எப்போதும் அவரை பற்றி பெருமை படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழன் ஜெயிப்பான்

    விஜய்யின் ரசிகரான இவர் தளபதி டயலாக்குகளில் எனக்கு பிடித்தது.. நடந்து கொண்டிருக்கிறது.. "தமிழன் ஜெயிப்பான்" என்ற டயலாக்கை பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actor Vijay fans celebrates high court order. They says Vijay is the perfect role model for all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X