Actor Vijay: விஜய்யோட எல்லா படத்தையும் ரீ -ரிலீஸ் செய்யனும்.. ரசிகர்களோட ஆசையை பாருங்க!

சென்னை: நடிகர் விஜய் எப்போதுமே மாஸ்தான். அவருக்கு சர்வதேச அளவில் மாஸான ரசிகர்கள் அதிகமானோர் உள்ள நிலையில் அவரது ஒவ்வொரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான லியோ, வாரிசு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தன.

தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மாஸ்கோவில் நடந்து முடிந்துள்ளது. படம் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட்டிங் ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்குள் தள்ளிவிட்டு தற்போது அவரது கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Actor Vijay fans enjoys Ghilli re-release in theatres

நடிகர் விஜய்: நடிகர் விஜய் என்றாலே எப்போதுமே மாஸ்தான். இவருக்கு பெரியவர்கள் என்றில்லை. குழந்தை ரசிகர்கள்தான் அதிகம். கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ படங்கள் வெளியாகி வசூல்மழை பொழிந்தன. ஆனால் இந்தப் படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

கில்லி ரீ-ரிலீஸ்: இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய்யின் கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச அளவில் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் அப்போதே அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழில் இந்த வசூலை எட்டிய முதல் படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்தது. இந்நிலையில் தற்போது படத்தின் ரீ ரிலீசை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் அதிகமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

Actor Vijay fans enjoys Ghilli re-release in theatres

ரசிகர்கள் கொண்டாட்டம்: நேற்றைய தினம் படம் சர்வதேச அளவில் ரிலீசான நிலையில், முதல் நாளிலேயே 10.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துவரும் ரசிகர்கள், தான் 3 வயதாக இருந்தபோது படத்தை பார்த்ததாகவும் தற்போது 20 ஆண்டுகள் கழித்து அதே திரையரங்கில் பார்ப்பதாகவும் கொண்டாட்டத்துடன் கூறினர். விஜய் அரசியலுக்கு வருவதால் அவரது படங்களை FDFS பார்ப்பதன் சுவாரஸ்யம் கிடைக்காது என்பதை வருத்தத்துடன் பகிர்ந்த ஒரு ரசிகை, அதனால் என்ன அவரது 69 படங்கள் இருக்கிறதே, அனைத்து படங்களையும் ரீ -ரிலீஸ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறினார்.

திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம்: படம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுததியுள்ளது. ஒரு பெண் தன்னுடைய குழந்தையுடன் படத்தின் அப்படி போடு பாடலுக்கு ஆட்டம் போட்ட நிலையில், குழந்தையை கீழே இறக்கி விட்டுவிட்டு தன்னுடைய நடனத்தை தொடர்கிறார். கீழே இறக்கிவிடப்பட்ட குழந்தையும் ஆட்டத்தை தொடர்கிறது. இதுபோன்ற சுவாரஸ்யங்களை கில்லி ரிலீசான அனைத்து திரையரங்குகளிலும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X