விஜய் ரசிகன்னா கட் அவுட்டுக்கு பால் ஊத்திட்டு விசிலடிச்சு படம்பாக்குறவன்னு நெனச்சீங்களா?
விஜய் ரசிகர்கள் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு உதவி வருகின்றனர்.
சென்னை : விஜய் ரசிகர்கள் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.
தொடர் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கேரளா மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் தன்னார்வலர்கள் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலுருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் உதவிகள் வந்து கொண்டிருகின்றது. இந்த நிலையில் விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விஜய் ரசிகர்கள் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். பெங்களூரில் உள்ள விஜய் ரசிகர்கள் கோட்டயம் பகுதி விஜய் ரசிகர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்திலிருந்தும் விஜய் ரசிகர்கள் உன்னால் முடியும் என்ற நம்பிக்கையூட்டும் வாசகம் ஏந்திய விஜய் புகைப்படத்தை பேருந்தில் ஒட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.
ரசிகன் என்றால், நடிகர் பற்றி பெருமைப் பேசுவது, முதல்நாள் முதல்காட்சி படம் பார்ப்பது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது மட்டுமல்ல இதுபோன்ற நெருக்கடி நேரங்களில் உதவுவதுதான் என விஜய் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











