தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு… கனவாக இருக்கக்கூடாதா... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதங்கம் !

சென்னை : சினிமா பிரபலங்களிடையும் , ரசிகர்களிடையும் மிகப்பெரிய பேசுப்பொருளாக இருந்தது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து.

காதலித்து திருமணம் செய்த இவர்கள் 18 ஆண்டு இல்லற வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், இது கனவாக இருக்கக்கூடாதா என என் உள்மனம் ஏங்குவதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பல சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கருத்துக்களை கூறி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரபல இயக்குனரும், நடிகரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். எந்த ஒரு கணவன் , மனைவியும் முழுவதுமாக புரிந்து கொண்டு வாழ்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்பம், துன்பம் நிறைந்ததுதான் வாழ்க்கை அந்த வாழ்க்கையைத் தான் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

வேதனையாக உள்ளது

வேதனையாக உள்ளது

பொதுவாக கணவன் மனைவி விவாகரத்து செய்கிறார்கள் என்றால் அதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியாது. அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் நானும் என் மனைவியும் வீடு தேடி சென்று அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை சேர்ந்து வாழவைக்க முயற்சி செய்திருக்கிறோம்.

கனவாக கலைந்துவிடாதா

கனவாக கலைந்துவிடாதா

இவர்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரிகிறார்கள் என்பதை கேட்கும் போது அது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த செய்தி கனவாக கலைந்துவிட வேண்டும், இல்லை என்றால் பொய்யாகிவிட வேண்டும் என்று உள் மனம் நினைப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தொலைத்த இடத்தில் தேட வேண்டும்

தொலைத்த இடத்தில் தேட வேண்டும்

நாம் வாழ்க்கையை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும். பணமோ, நிம்மதியா, சந்தோஷமோ அதை நாம் எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேட வேண்டும். அட்வைஸ் கொடுப்பதாக நினைக்க வேண்டாம், நான் ஒரு நலன்விரும்பியாக மற்றும் ஒரு ரசிகனாக சொல்கிறேன் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X