Vijay: விஜய்யுடன் மோதும் விஜய்.. கோட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் காத்திருக்கும் சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் சூழலில் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ கேரக்டர்களில் இணைந்துள்ளனர்.

கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். படத்தில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. படம் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

Vijay The greatest of all time movie Venkat prabhu tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். இதில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் தொழில் நுட்பத்தை படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய், வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அங்கு விஜய்யின் சில காட்சிகள் கிரீன் மேட்டில் படமாக்கப்பட்டு டீ ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Vijay The greatest of all time movie Venkat prabhu tamil cinema

விஜய்யுடன் மோதும் விஜய்: இந்நிலையில் தற்போது அப்பா மற்றும் மகன் விஜய்யின் சண்டை காட்சி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. கோட் படத்தின் கிளைமாக்சில் அப்பா மற்றும் மகன் விஜய் இருவரும் பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் களத்தில் சண்டையிடுவதாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தற்போது கூறப்பட்டுள்ளது. ஆங்காங்கே வைக்கப்படும் வெடிகுண்டுகளை அகற்ற அப்பா விஜய் களமிறங்குவதாக காட்சிகள் அமைந்துள்ளதாகவும் இந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தில் விஜய் மற்றும் மோகன் இடையிலும் அதிரடி சண்டை காட்சிகள் உள்ள சூழலில் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் விஜய் மற்றும் விஜய் இடையில் கிளைமாக்சில் இந்த சண்டை காட்சி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்: முன்னதாக படத்தில் அப்பா மற்றும் மகன் விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. சில கலவையான விமர்சனங்களையும் இந்த போஸ்டர்கள் பெற்ற நிலையில், தற்போது விஜய் மற்றும் விஜய் இடையே சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விஜய்யுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன், மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆகியோர் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் இதுபோல ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை வைத்து வெங்கட் பிரபு வேலை வாங்கியுள்ளார்.

விஜய் பிறந்தநாள்: இதனால் இந்த படத்தின் கதைக்களம் எப்படி அமையும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மேலும் அன்றைய தினம் தளபதி 69 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படங்களாக அமைய உள்ள இந்த படங்களின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் காட்டி வருவது குறிப்பிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X