Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு படத்தின் சூட்டிங்கை முடித்த விஜய்.. இன்னும் பேட்ச் வேலைகள் இருக்காமே!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.
வரும் 4ம் தேதி விஜய் தனது 30 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடவுள்ள நிலையில் ரசிகர்கள் சிறப்பு டிபி மற்றும் காமன் டிபி என தெறிக்கவிட்டு வருகின்றன.
இதனிடையே வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிளை அன்றைய தினம் வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வாரிசு
பிரச்சனை
முடிவுக்கு
வரும்...
ஆர்ட்
டைரக்டர்
வீராசமர்
விளக்கம்!

விஜய்யின் வாரிசு படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் படத்துடன் மோதவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தை கொண்டாட ரசிகர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் ஒருபுறமும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஒருபுறமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

குடும்ப சென்டிமெண்ட் படம்
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யின் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. மற்ற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

சூட்டிங்கை முடித்த விஜய்
படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட போர்ஷன்கள் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் தன்னுடைய சூட்டிங்கை விஜய் நிறைவு செய்துள்ள நிலையில், வரும் 9ம் தேதி வரை படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெறும் என்றும் இதில் நடிகர்கள் ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிங்கிள் அப்டேட்
முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் கவர்ந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு விஜய் மற்றும் ராஷ்மிகாவின் ரஞ்சிதமே பர்ஸ்ட் சிஙகிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்து நடைபோட்டு வருகிறது. தொடர்ந்து விஜய்யின் 30 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும்வகையில் வரும் 4ம் தேதி இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கான எதிர்பார்ப்பு
பொங்கல் ரேசில் இந்தப் படம் அஜித்தின் துணிவு படத்தில் மோதவுள்ள நிலையில், இரண்டு படங்களும் சமமான திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்சியின் முந்தைய படமான தோழா படம் சிறப்பான என்டர்டெயினராக தமிழில் அமைந்தநிலையில், தற்போது குடும்ப சென்டிமெண்ட்டுடன் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படமும் மிகச்சிறந்த வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.