Thalapathy 68: தாய்லாந்து பறந்த விஜய்.. தளபதி 68ல் வெங்கட் பிரபு சும்மா புகுந்து விளையாடப்போறாரு போல
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் தளபதி 68 படத்திற்காக தாய்லாந்துக்கு கிளம்பி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்த வார இறுதியில் 600 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தில் தளபதி 68: அடுத்ததாக ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த வரும் தளபதி 68 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாக்ஷ்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
செகண்ட் ஷெட்யூல்: சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் லியோ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தளபதி 68 படத்தின் முதல் பாடல் காட்சியும் அங்குதான் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த ஷெட்யூலுக்காக நடிகர் விஜய் தாய்லாந்து கிளம்பி சென்றுள்ளார். அவருக்கு முன்னதாகவே இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தாய்லாந்து சென்றதாகவும், லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் தற்போது கிளம்பி உள்ளதாகவும் ஒன்னும் வெளியாகி உள்ளன.
விமானத்தில் பறந்த விஜய்: கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாகவும் அதே நேரத்தில் சயின்ஸ் பிக்சன் கலந்து இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் இந்த படத்தில் அப்பா மகன் என இருவேறு தோற்றங்களில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
இந்த படத்தின் மெயின் வில்லனே மைக் மோகன் தான் என்றும் நடிகர் பிரசாந்த் நெகட்டிவ் ஷேட் கேரக்டரில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு ஆயுத பூஜையை டார்கெட் செய்து லியோ படத்தை போலவே தளபதி 68 படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கா நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், அதன் வீடியோ காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











