Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிக்கு அடுத்து யார்?..தொடர் வெற்றியில் முன்னணியில் விஜய்
சென்னை : நடிகர் விஜய் தனது பிறந்தநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ளார்.
Recommended Video
அவரது பிறந்தநாளில் அவரைக் காட்டிலும் அந்த சிறப்பான நாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறகு கோலிவுட்டின் உச்ச நாயகனாக காணப்படுகிறார் விஜய்.
மறுபடியும் வலிமை வைப்ரேஷன் வருதே.. பொங்கலுக்கு தள்ளிப் போகிறதா ஏகே61? விஜய்யுடன் மோதுவாரா?
மாஸ்டர் விஜய்
நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் மாஸ்டர் விஜய்யாக நடித்துள்ளார். வசந்த ராகம், சட்டம் ஒருவிளையாட்டு போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். நாளைய தீர்ப்பு என்ற படத்தில் இளைஞனாக இவரது அறிமுகம் அமைந்தது.
காதலுக்கு மரியாதை செய்த விஜய்
தொடர்ந்து செந்தூரப்பாண்டி, தேவா, விஷ்ணு, சந்திரலேகா என இவரது பயணம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சிறப்பான இயக்குநர்கள் கைகளில் இணைந்த விஜய், கொடுத்ததெல்லாம் சிறப்பான காதல் படங்கள். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என இவரது காதல் படங்கள் இவரை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.
கொத்து பரோட்டோ பாடல்கள்
அதுவரை கொத்து பரோட்டோ பாடல்களை பாடிக்கொண்டு, கல்லூரி மாணவன் கதாபாத்திரங்களில் நடித்துவந்த விஜய்க்கு இந்தப் படங்கள் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தன. தொடர்ந்து இதுபோன்ற சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அனைத்துமே அவருக்கு ரசிகர்கள் வட்டத்தை பெரிதுப்படுத்தியது. இளைய தளபதி என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.
காமெடி கலாட்டாக்கள்
தொடர்ந்து மின்சாரக் கண்ணா உள்ளிட்ட படங்களின்மூலம் தனக்கு காமெடியும் நன்றாக வரும் என்று நிரூபித்தார். பிரியமானவளே, குஷி, பிரெண்ட்ஸ் என சிறப்பான படங்களை கொடுத்த விஜய், தொடர்ந்து மாஸான படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு தளபதியாகவும் மாறினார்.
சொல்லி அடித்த கில்லி
திருமலை, கில்லி என மாஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், கில்லி படம் முதல்முறையாக 50 கோடி ரூபாய்களை வசூலித்தப்படம் என்ற சாதனையை படைத்தது. முன்னதாக வெளியான ரஜினியின் எவர்கிரீன் படமான படையப்பா 30 கோடி ரூபாய்களை மட்டுமே வசூலித்த நிலையில் கில்லி சொல்லி அடித்தது.
வேறு கோணத்தில் விஜய்
தொடர்ந்து மதுர, திருப்பாச்சி என இவரது வெற்றிப் படங்களின் பட்டியல் நீண்டது. தொடர்ந்து பிரம்மாண்டங்களின் இயக்குநர் ஷங்கருடன் நண்பன் படத்தில் இணைந்து நடித்தார் விஜய். இந்தப் படம் அவரை வேறு கோணத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
மாஸ் ஹீரோ விஜய்
அடுத்ததாக இவர் நடித்தெல்லாம் இவரை மாஸ் ஹீரோவாக்கிய துப்பாக்கி, தலைவா உள்ளிட்ட படங்கள். இந்தப் படங்களெல்லாம் 100 கோடி கிளப்பில் இணைந்த படங்கள். ஜில்லா, கத்தி என விஜய்யின் அடுத்தடுத்த வசூல்வேட்டை படங்களும் வெளியாகின. தொடர்ந்து சர்க்கார், தெறி, மெர்சல் என சிறப்பான படங்களை கொடுத்தார் விஜய்.
லோகேஷின் மாஸ்டர்
சமீபத்தில் லோகேஷின் மாஸ்டர், நெல்சனின் பீஸ்ட் படங்களும் வெளியாகி சிறப்பான வசூல் மழையை பொழிந்துள்ளன. தமிழகத்தில் உச்ச நாயகன் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். 70 வயதை கடந்த நிலையிலும் இன்னும் அவரை ஹீரோவாக சூப்பர்ஸ்டாராக பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். தலைவா என கொண்டாடுகின்றனர்.
சூப்பர்ஸ்டாரின் வழியில்
வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து ஹீரோவாகி சூப்பர்ஸ்டாராகவும் மாறியவர் ரஜினிகாந்த். இந்த உச்சத்தை எட்ட அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. அதேபோலத்தான் விஜய்யும் தளபதி என்ற இந்த சிறப்பை அடைய கரடுமுரடான பாதைகளை கடந்து வந்துள்ளார்.
உச்ச நாயகனாக விஜய்
இதனிடையே கோலிவுட்டில் ரஜினிக்கு சமமான ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளார் விஜய். அடுத்த உச்ச நாயகனாக கோலிவுட்டை ஆக்கிரத்து வருகிறார். இது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிர்களும் ஏற்றுக் கொண்ட உண்மையாக உள்ளது. நாளைய தினம் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் விஜய். இந்த நாளை திருவிழாவாக கொண்டாட அவரது ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்
காமன் டிபி, மாஷ் அப்கள், ஸ்பெஷல் வீடியோக்கள் என இணையதளமே களைகட்டி வருகிறது. இன்றைய தினம் அவர் தற்போது நடித்துவரும் தளபத 66 படத்தின் டைட்டில் வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். தொடர்ந்து தளபதி 66 மற்றும் தளபதி 66 பர்ஸ்ட் லுக் போன்ற ஹேஷ்டேக்குகளை தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே வைத்துள்ளனர்.