Vijay: போடு பார்த்துக்கலாம்.. லியோ படத்திற்கு நம்பிக்கை கொடுத்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டு வருகிறது.

Actor Vijay gave confidence about the release date announcement to the producer

அக்டோபர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியோ படத்தின் ரிலீஸ் தேதிக்கு நம்பிக்கை கொடுத்த விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே நிறைவு பெற்ற நிலையில், தற்போது வெளிநாட்டில் தன்னுடைய விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளார் விஜய்.

லியோ படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் -த்ரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங் உள்ளிட்டவற்றின் வீடியோக்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர்கள், பர்ஸ் சிங்கிள் ஆகியவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் தத் பிறந்தநாளையொட்டி வெளியான கிளிம்ப்ஸ் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அடுத்ததாக இந்த மாதம் அர்ஜூன் பிறந்தநாளையொட்டியும் படத்தின் ப்ரமோ வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது படத்தின் சில பேட்ச் வேலைகளை படக்குழுவினர் காஷ்மீரின் பெஹல்காமில் செய்து வருகின்றனர். இந்த சூட்டிங் தொடர்ந்து 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை. அவர் முன்னதாகவே தன்னுடைய சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டார்.

இதனிடையே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதத்தில் படத்தின் இசை வெளியீடு வெளிநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்த மாதம் இறுதியில் இசை வெளியீடு நடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் எல்சியூவில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. படத்தில் விஜய் கேங்ஸ்டராக லியோ என்ற கேரக்டரிலும் பார்த்திபன் என்ற கேரக்டரிலும் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். முன்னதாக வெளியான வீடியோக்களில், வித்தியாசமான தலைமுடியுடன் லியோ கெட்டப்பையும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளிலும் மற்றொரு கெட்டப்பிலும் விஜய்யை பார்க்க முடிந்தது. இந்தப்படம் தற்போதே சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தயாரிப்பாளர் லலித்குமார் தன்னுடைய தற்போதைய பேட்டியில் விஜய் குறித்த சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார். படத்தின் அறிவிப்பை மேற்கொள்வதற்கு முன்னதாக, அறிவிப்புடன் சேர்த்து படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட உள்ளதாக தான் விஜய்யிடம் கூறியதாக லலித்குமார் தெரிவித்துள்ளார். படத்தில் அதிகமான நட்சத்திரங்கள் உள்ள நிலையில், ரிலீஸ் தேதியை முன்னதாகவே வெளிப்படுத்த அவ்ளோ தைரியம் இருக்கா என்று விஜய் அவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த லலித்குமார், பண்ணிடுவோம்னு நம்பிக்கை இருக்கு என்று விஜய்யிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய், சரி போடு பார்த்துக்குவோம் என்று பதிலளித்துள்ளார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக டைட்டிலுடன் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கான சரியான திட்டமிடலுடன் படக்குழு செயல்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X