அன்று அஜித்குமார்.. இன்று சிவகார்த்திகேயன்.. தளபதி விஜய் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் விஜய்யின் கோட் படம் வெளியான நிலையில் படம் சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் காம்பினேஷன் காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

vijay sivakarthikeyan goat movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சியின் ஷூட்டிங் சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டு தொடர்ந்து ஒரு வார காலம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ள நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்திருந்தனர்.

கோட் படம்: கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் வசூல் ஏறக்குறைய 500 கோடிகளை சர்வதேச அளவில் ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வீடியோக்களை அடுத்தடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படத்தின் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விஜய் வாட்ச் ஒன்றை பரிசளிப்பதாக காணப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த பரிசு: கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ கேரக்டரில் சிவகார்த்திகேயனிடம் இடம் துப்பாக்கியை கையில் கொடுப்பார் விஜய். அந்த வகையில் கோலிவுட்டை இனிமேல் தான் பார்த்துக் கொள்வதாக சிவகார்த்திகேயன் மறைமுகமாக கூறுவதாக இந்த படத்தின் காட்சிகள் அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு நடிகர் விஜய் வாட்ச் பரிசளித்ததை ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். முன்னதாக மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய், அஜித் குமாருக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் வாட்ச்சை பரிசளித்துள்ளார்.

vijay sivakarthikeyan goat movie

அன்று அஜித்.. இன்று சிவகார்த்திகேயன்: இந்த இரண்டு நிகழ்வுகளையும் கம்பேர் செய்து ரசிகர்கள் தற்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சிவகார்த்திகேயனுக்கு வாட்சை பரிசளித்ததுடன் அதை அவரது கையிலும் கட்டி விடுகிறார் விஜய். மேலும் அவரை கட்டியணைத்து பாராட்டு தெரிவிப்பதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. இந்த விஷயத்தை நம்பமுடியாமல் சிவகார்த்திகேயன் பார்ப்பதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. முன்னதாக அஜித்திற்கும் விஜய் வாட்சை கையில் கட்டி விட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X