Vijay: ப்பா.. என்னவொரு சிரிப்பு.. வெள்ளை சட்டை பளபளக்குதே.. ரஞ்சிதமே கிஸ் கொடுத்த விஜய்!
சென்னை: பனையூரில் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து பேசும் கூட்டம் நடைபெற்றது.
அதற்காக விழா மேடைக்கு வருவதற்கு முன்னதாக தனக்காக காத்திருக்கும் ரசிகர்களை பார்த்து கையசைத்து புன்னகைத்து விஜய் ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ் கொடுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
விஜய்யின் வெள்ளை சட்டையை பார்த்த உடனே ரசிகர்கள் அரசியல் என்ட்ரி கன்ஃபார்ம் என ஏகப்பட்ட கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

வாரிசு தமிழ்நாடு ரிலீஸ்
அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ள நிலையில், வாரிசு படத்தை தமிழ்நாட்டில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இன்று பனையூரில் விஜய் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அங்கேயே அறிவிக்கப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு
விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பனையூரில் பிரம்மாண்ட விழாவில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக அங்கே விஜய் வருகை தந்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

முதலில் பிரியாணி
தளபதி விஜய்யின் தரிசனத்துக்கு முன்பாக அனைவரும் முதலில் வயிறார உண்ண வேண்டும் என்பதற்காக பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. காலையில் பிரியாணி சட்டி வைத்து சமைக்க ஆரம்பித்ததில் இருந்தே பனையூர் பிரியாணி ஹாஷ்டேக் டிரெண்டானது. மேலும், சோஷியல் மீடியாவில் அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையும் அமர்களமாக ஆரம்பம் ஆகிவிட்டது.

ரஞ்சிதமே கிஸ்
பனையூரில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ள நிலையில், அதற்காக வருகை தந்த நடிகர் விஜய் வரும் போது அவருக்காக காத்திருந்த ரசிகர்களை பார்த்து வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் இடம்பெறும் ஸ்டைலான ஃபிளையிங் கிஸ்ஸை ரசிகர்களுக்கு பரிசாக அளித்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

வெள்ளை சட்டை
நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து அசத்தலாக வந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினருடன் அரசியல் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையையும் சில தீர்மானங்களையும் விஜய் அறிவிக்கப் போகிறார் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தெறிக்கும் டிரெண்டிங்
வாரிசு ஹாஷ்டேக், விஜய் ஹாஷ்டேக், பனையூர் பிரியாணி ஹாஷ்டேக் என விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











