Vijay: சூப்பர் ஸ்டாரை பின்பற்றும் தளபதி.. சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்ற விஜய்.. காரணம் இதுவா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தின் ரிலீஸ் வேலைகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் நடந்து வருகின்றது. படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சீரடி சாய் பாபா கோவிலுக்கு புறப்பட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் அடுத்து தனது 69வது படத்தில் நடித்த பின்னர், சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, அதில் இருந்து முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவுள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். கடந்த வாரத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கொடிப்பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. மாநாடு நடத்த அனுமதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த், விழுப்புரம் மாவட்ட தலைமைக் காவலரிடம் மனு அளித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

கோட்: செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தி கோட் படம் ரிலீஸ் ஆகவுள்ளது, அதேநேரத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில், விஜய் இந்த இரண்டுக்குமே தயாராகி வருகின்றார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் விஜய்க்கு மிகவும் முக்கியமான மாதம் என்பதால் விஜய் ரசிகர்களும், தவெக கட்சியினரும் செப்டம்பர் மாதத்திற்காக காத்துக் கொண்டு உள்ளனர். இதனால்தான் தி கோட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா வேண்டாம் என அவர் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.

சாய் பாபா: இப்படியான நிலையில், விஜய் இன்று அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம், மகாராஸ்ட்ராவில் உள்ள அகமது நகரில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார். தி கோட் படத்தின் ரிலீஸ் தனது கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதால் சிறப்பு வழிபாடு நடத்த சாய் பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே சென்னையில் தனது தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சாய் பாபா கோவில் கட்டிக்கொடுத்திருந்தார் விஜய். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாய்பாபா பக்தர் என்பதால் சூப்பர் ஸ்டாரை தளபதி பின்பற்றுகின்றார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications