திரையுலகில் விஜய்யின் 30 ஆண்டு கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்!
சென்னை : நடிகர் விஜய் சர்வதேச அளவில் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஹீரோவாக தொடர்ந்து இருந்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான இவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்ரீதியாக மிரட்டியது.
தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களின் விருப்ப ஹீரோ
நடிகர் விஜய் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக இருந்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள விஜய், நாளைய தீர்ப்பு படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்ட விஜய், தன்னை மாஸ் ஹீரோவாக்கிக் கொள்ள கடந்துவந்த பாதை கரடுமுரடானது.

நெகட்டிவ் விமர்சனங்கள்
எண்ணெய் வடிந்த முகத்துடன், இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டார் என்ற விமர்சனங்களையே ஆரம்ப காலகட்டத்தில் விஜய் எதிர்கொண்டார். தொடர்ந்து தன்மீது வைக்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொள்ள போராடினார் விஜய். பூவே உனக்காக போன்ற படங்கள் இவரது பயணத்தை வெற்றிப் பாதையில் மாற்றியது. தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தார் விஜய்.

கரடுமுரடான பயணம்
இவரது அடுத்தடுத்த வெற்றிகள் இவரை ரசிகர்களிடையே மாஸ் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த வெற்றியை அடைய பல கரடுமுரடான பயணங்களை மேற்கொண்டார் விஜய். தன்னை நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகராகவும், தயாராப்பாளராகவும் திரையுலகில் அடையாளப்படுத்திக் கொண்டார். தற்போது வரை தன்னுடைய படங்களில் பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

பின்னணி பாடகர் விஜய்
தன்னுடைய ஆரம்ப கால படங்களில் இருந்து தற்போது வாரிசு படம் வரை பின்னணி பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் விஜய். இவரது குரலில் பல வெற்றிப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. பல படங்களில் தன்னுடைய மென்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திரையுலகில் 30 ஆண்டுகள் நிறைவு
இந்நிலையில் அவர் இன்னும் சில தினங்களில் திரையுலகில் தன்னுடைய 30 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ளார். இதற்காக இந்தத் தருணத்தை கொண்டாடும் வகையில் விஜய்யின் ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர். வரும் டிசம்பர் 4ம் தேதி அவர் தனது 30 ஆண்டு திரையுலக கொண்டாட்டத்தை எட்டவுள்ளார். அவரது முதல் படமான நாளைய தீர்ப்பு கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்
விஜய்யின் பிறந்தநாளையே ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம். அந்த நாளில் விஜய் படங்களின் பிரத்யேக அறிவிப்புகள் வெளியாகும். கடந்த பிறந்தநாளின்போதுகூட வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய்யின் 30 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு சிறப்பு விஷயங்களை செய்ய காத்திருக்கின்றனர்.

வாரிசு சிங்கிள்/தளபதி 67 அறிவிப்பு?
இதனிடையே அன்றைய தினம் விஜய்யின் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் ரஞ்சிதமே முதல் பாடல் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











