டிசம்பரில் துவங்கும் தளபதி 67.. படத்தில் இணையும் புதிய கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்கலாமா!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

படம் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. அதற்கேற்ப படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் சூட்டிங் வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரது படங்கள் சொதப்பினாலும் கூட அதை தூக்கி நிறுத்த ரசிகர்கள் எப்போதுமே தயக்கம் காட்டியதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை வாங்கினாலும் ரசிகர்களின் அன்பை பெற்று வசூல்ரீதியான வெற்றியையும் குவித்தது.

வாரிசு படம்

வாரிசு படம்

தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என அடுத்தடுத்து நடந்துள்ளது. படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் ரிலீசாக படம் வெளியாக உள்ளது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் விரைவில் முடித்துவிட்டு பொங்கல் ரிலீசாக படம் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களுடன் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முன்னதாக தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் தளபதி 67 படம்

டிசம்பரில் தளபதி 67 படம்

இந்தப் படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் சூட்டிங் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விஜய்யுடன் இணையும் நாய்

விஜய்யுடன் இணையும் நாய்

இதனிடையே இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், மோகன்லால் உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் புதிய வரவாக நாய் ஒன்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளது. இதுகுறித்து அந்த நாயின் உரிமையாளர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். டிசம்பரில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு கூடுதல் அட்ராக்ஷன்

விஜய்க்கு கூடுதல் அட்ராக்ஷன்

படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ள நிலையில், அவருடன் இந்த அரியவகை நாய் நடிக்கவுள்ளது அவரது கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. கேங்ஸ்டர் என்றால் நாய் கூட இருப்பது கூடுதல் அட்ராக்ஷனை அந்த கேரக்டருக்கு கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X