Thalapathy 68: அப்பா -மகன் கேரக்டர்களில் விஜய்.. தளபதி 68 குறித்து வெளியான புதிய அப்டேட்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளளார் நடிகர் விஜய்.
இந்தப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் விஜய்.

தளபதி 68 படத்தில் அப்பா -மகன் கேரக்டர்களில் நடிக்கும் விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் -விஜய்யின் மாஸ் கூட்டணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக தொடர்ந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்கு படம் தயாராகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்த தினங்களையொட்டி அவர்களின் கேரக்டர் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டின. இதில் அர்ஜூன் பிறந்தநாள் ப்ரமோ அதிகமான வியூஸ்களை யூடியூபில் பெற்று மாஸ் காட்டியது.
தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியா, சென்னை, கோவை அல்லது மதுரையில் இந்த இசை வெளியீடு நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த இடம் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த இசை வெளியீடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல விஜய் குட்டிக்கதை ஒன்றை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையவுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டையும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து தளபதி 68 சூட்டிங் மற்றும் பூஜை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் அப்பா -மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அட்லியின் இயக்கத்தில் வெளியான பிகில் படத்திலும் அப்பா -மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். இந்தப் படத்தில் அப்பா கேரக்டரில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தளபதி 68 படத்தின் ஒரு கேரக்டரில் Raw Agentஆக விஜய் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் எதிரான காட்சிகளிலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் இந்த இரட்டை கெட்டப்புகளுக்காக தற்போது லாஸ் ஏஞ்சல்சில் விஜய்க்கு 3D VFX Scan எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லவுள்ளனர். முன்னதாக அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரை மாஸாக காட்டியிருந்தார் வெங்கட்பிரபு. அஜித்தின் கேரியர் பெஸ்ட்டாக அந்தப்படம் அமைந்த நிலையில், அதே போன்றதொரு மாஸ் ஸ்கிரிப்டைதான் தற்போது விஜய்க்காக வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











