Actor Vijay: தளபதி 69 படத்தை இயக்க லைன் கட்டும் இயக்குநர்கள்.. யாருக்கு கிடைக்கும் லக்கி சான்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் அவர் தனது அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாகவே விஜய் அரசியல் பிரவேசம் கணிக்கப்பட்டிருந்தாலும் நேற்றைய தினம் முறையாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய கட்சியை அறிவித்துள்ளார். இதையொட்டி விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதையும் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார் விஜய்.

தற்போது கமிட் செய்துள்ள மற்றொரு படத்தை முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அவரது முடிவு ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் அவரது அரசியல் என்ட்ரி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of All time படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை தொடர்ந்து அவரது தளபதி 69 படம்தான் அவரது இறுதிப்படமாக அமையவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இந்தப்படத்தை பிரபல தெலுங்குப்பட தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

Actor Vijay going to quit cinema after Thalapathy 69 and his fans wants to know the director

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வசூல்வேட்டை நடத்தி வருகின்றன. அவரது நடிப்பில் கடந்த ஆண்டில் மட்டுமே வாரிசு, லியோ என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. இதில் லியோ படம் 600 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்த உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை விஜய் கவர்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது.

விஜய்யின் அரசியல் என்ட்ரி: இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப்பட அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துவந்த விஜய், இதன்மூலம் மட்டுமே மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கொடுத்துவிட முடியாது என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதனால்தான் தான் தமிழக வெற்றி கழகம் கட்சியை துவக்கியுள்ளதாகவும் தெளிவுப்படுத்தியுள்ளார். இது முன்னதாகவே கணிக்கப்பட்ட விஷயம்தான் என்றபோதிலும் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

தளபதி 69 படம்: தற்போது கமிட் செய்துள்ள GOAT படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தில் நடித்து முடித்துவிட்டு நடிப்பிலிருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே அவரது தளபதி 69 படத்தை யார் இயக்குவார்கள் என்று சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. முன்னதாக வெற்றி மாறன் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

லைன் கட்டும் இயக்குநர்கள்: இதனிடையே இயக்குநர் ஹெச் வினோத் அரசியல் கதைக்களத்தை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்தப் பட்டியலில் மீண்டும் விஜய் -லோகேஷ் கனகராஜ் இணைந்து லியோ 2 படத்தை கொடுக்கவுள்ளதாகவும் இதுவே விஜய்யின் கடைசி படமாக தளபதி 69ஆக அமையும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள நிலையில் இந்த லிஸ்டில் திரிவிக்ரமும் இடம்பெற்றிருந்தார். அட்லீக்கு இந்த பட்டியலில் இடம் இல்லாமலா என்பது போல அவரது பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X