Vijay Salary in Leo - லியோ படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. என்னப்பா இது புதுசா இருக்கு
சென்னை: Vijay Salary In Leo (லியோவில் விஜய் சம்பளம்) லியோ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால் படமோ விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியது. மேலும் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கிய துணிவு படம் விமர்சன ரீதியாக வாரிசைவிட ஒரு படி மேலே நின்றது. அதன் காரணமாக அடுத்த படத்தை மாஸாக கொடுக்க வேண்டுமென்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறார்.

லியோ: அதன்படி ஏற்கனவே மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார். லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ரிலீஸ் நாளை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர். கண்டிப்பாக படம் வசூல் வேட்டை நடத்தும் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செம பிஸ்னெஸ்: படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பாகவே லியோ பிஸ்னெஸ்ஸில் பட்டையை கிளப்பியதாக தெரிகிறது. இதுவரை அந்தப் படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே விஜய்யின் சம்பளமும் உச்சபட்சமாக அதிகரித்திருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. இதற்கிடையே லியோ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி விமர்சனத்தையும், வரவேற்பையும் ஒருசேர பெற்றது குறிப்பிடத்தக்கது.
ப்ரீமியர் ஷோ: மேலும் லியோ படத்துக்கு அதிகாலை காட்சி அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அப்செட்டான தயாரிப்பாளர் வேறு வழி ஒன்றை யோசித்திருக்கிறார். அதாவது அக்டோபர் 18ஆம் தேதியே பெய்டு ப்ரீமியர் ஷோவை அவர் திரையிட திட்டமிட்டிருக்கிறார். இதனாலும் லியோவின் வசூல் எகிறும் என்பது திரைத்துறையினரின் கணிப்பு.
விஜய் சம்பளம்: இந்நிலையில் லியோ படத்தில் விஜய் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதாவது பீஸ்ட் படத்துக்கு முதன் முதலாக நூறு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய விஜய் வாரிசு படத்துக்கு 120 கோடி ரூபாய் வாங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எதிர்பார்த்த ரிசல்ட் வாரிசுக்கு வரவில்லை. இதனால் லியோவில் பத்து கோடி ரூபாய் மட்டும் ஏற்றி 130 கோடி ரூபாயை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த படம்: அதேசமயம் அடுத்ததாக அவர் நடித்து வரும் தனது 68ஆவது படத்துக்கு 175 கோடி ரூபாயிலிருந்துதான் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போது லியோவில் அவர் 130 கோடி ரூபாய்தான் வாங்கியிருப்பதாக கூறப்படுவதால் எப்படி 40 கோடி ரூபாயை சம்பளமாக விஜய் ஏற்றுவார். எனவே 175 கோடி ரூபாய் என்பதில் உண்மையில்லையோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications