Amaran: துப்பாக்கியை சரியாக பயன்படுத்திய சிவகார்த்திகேயன்.. அமரன் டீமிற்கு வாழ்த்து சொன்ன விஜய்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது அமரன் படம். இந்த படம் மிகச் சிறப்பான கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. காதல், சென்டிமெண்ட், மற்றும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை கூறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் அமைந்திருந்த நிலையில் படம் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்த்தின் குழுவினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

vijay sivakarthikeyan amaran movie


அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகச் சிறப்பான தீபாவளி கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் படம் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மிகச் சிறப்பான வகையில் உயர்ந்துள்ளது.

அமரன் டீமிற்கு விஜய் வாழ்த்து: அவரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக இணைந்து வருகிறார். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் நிலையில் அடுத்தடுத்து சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார், மற்றும் சுதா கொங்கரா ஆகிய இயக்குநர்களுடனும் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் அமரன் படக்குழுவினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் நடித்த சிவகார்த்திகேயன்: கடந்த செப்டம்பர் மாதத்தில் கோட் படத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடி காட்டியிருந்தனர். இதில் தன் கையில் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் விஜய் கொடுப்பதாக காட்சி அமைந்திருந்தது. அவர் துப்பாக்கியாக கோலிவுட்டில் தனது தளபதி பொசிஷனை கொடுத்ததாக கூறி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் உற்சாகம் தெரிவித்திருந்தனர். விஜய் சினிமாவை விட்டு அரசியலில் காலடி வைத்துள்ளதால் சினிமாவில் தன்னுடைய இடத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயன் நிரப்புவார் என்று இதன் மூலம் சொல்லாமல் சொன்னதாக சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அடுத்தடுத்து மீம்ஸ்களை போட்டு சமூக வலைதளங்களில் அதிரடி காட்டினர்.

விஜய் கொடுத்த துப்பாக்கி: இந்நிலையில் விஜய் கொடுத்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல், சினிமா என அடுத்தடுத்து பிசியாக இருந்தாலும் அமரன் படக்குழுவினரை பார்த்து தன்னுடைய பாராட்டுகளை விஜய் கூற மறக்கவில்லை. இதுகுறித்து அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். விஜய்க்கு எக்ஸ் தள பக்கத்தில் லவ் யூ என கூறியுள்ள ராஜ்குமார் பெரியசாமி, முன்னதாக விஜய்யை தான் சந்தித்த நிலையில் அடுத்த சந்திப்பிற்காக 12 வருஷம், 2 மாசம், 1 நாள், 15 மணி நேரம் காத்திருந்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X