நெல்சனை பாராட்டிய விஜய்... என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா!
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் புரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் விஜய் சன் டிவியில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பீஸ்ட். இந்தப் படம் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

சிறப்பான புரமோஷன்கள்
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன்களை அனைத்து மொழிகளிலும் சன் பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கிலும் பிரீ ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. இதில் பூஜா ஹெக்டே, அனிருத், நெல்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்தடுத்த அப்டேட்கள்
முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் தீம் பாடல் உள்ளிட்டவை வெளியாகி யூடியூபையே அலறவிட்டு வருகிறது. இவை கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்று தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. குறிப்பாக ட்ரெயிலர் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்கள் இந்தப் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை கொண்டாடி வருகின்றனர்.

சன் டிவியில் விஜய் பேட்டி
இந்நிலையில் படத்தின் புரமோஷனின் ஹைலைட்டாக நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம் சன் டிவியில் பேட்டியளித்துள்ளார். அவரை படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேட்டி எடுத்த நிலையில், அவரது சொந்த வாழ்க்கை, சினிமா கேரியர் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்து கேள்விகளை கேட்டார்.

நெல்சன் குறித்து விஜய் பாராட்டு
இந்நிலையில் நெல்சன் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், அவர் மிகவும் தெளிவான இயக்குநர் என்று பாராட்டினார். அவர் முன்னதாக திட்டமிட்டு பல விஷயங்களை சூட்டிங் ஸ்பாட்டில் செய்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார். இதைக் கேட்டு நெல்சன் மிகவும் உற்சாகமடைந்தார்.


Click it and Unblock the Notifications











