அரசியல் கட்சி பஞ்சாயத்துக்கு இடையில்.. 'மாஸ்டர்' விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அப்படியொரு திட்டமாம்!

By

சென்னை: அரசியல் கட்சி பிரச்னைகளுக்கு நடுவே, நடிகர் விஜய் புதிய திட்டம் ஒன்றை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவர் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர்.

இதையடுத்து ரசிகர்களை சந்தித்து நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன், ஆலோசனைக்

கூட்டம் நடத்தினார்.

அரசியல் விவகாரம்

அரசியல் விவகாரம்

அந்த கூட்டத்தில், அரசியல் விவகாரம் பற்றி பேசப்பட்டதாகக் கூறப்பட்டன. இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், அரசியல் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக ஷோபா ஆகியோர் பெயர்கள் அதில் இடம்பெற்றன.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய் அதை உடனடியாக மறுத்தார். ஆனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பதை அரசியல் இயக்கமாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தது தான் தான் என்றும் இதற்கும் விஜய்க்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.

தொடா்பு இல்லை

தொடா்பு இல்லை

இதனையடுத்து, தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடா்பும் இல்லை என விஜய் அறிக்கை மூலம் தெரிவித்தார். அதில் தனது இயக்க நிர்வாகிகள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

இந்நிலையில், இந்த அரசியல் பிரச்னைகளுக்கு இடையே, மாஸ்டர் பிளான் ஒன்றை வைத்திருக்கிறாராம், விஜய். அதாவது கொரோனா லாக்டவுனால் மூடப்பட்டு இருந்த தியேட்டர்கள் நாளை திறக்கப்படுகின்றன. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் அன்று தியேட்டரில் வெளியாகிறது.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

இந்தப் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயின். சாந்தனு உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் ரசிகர்களிடையே
வரவேற்பை பெற்றுள்ளன. படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தியேட்டர் விசிட்

தியேட்டர் விசிட்

இதற்கிடையே, தியேட்டர் அதிபர்கள் சங்கப் பொதுச்செயலாளர் பன்னிர் செல்வம், பெரிய நடிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால்தான் ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தார். அதை ஏற்று, பொங்கலுக்கு மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும்போது, தியேட்டர்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களை சந்திக்க இருக்கிறாராம் விஜய்.

Recommended Video

FROM MEDICAL BUSINESS TO CINEMA ACTING |CLOSE CALL WITH ACTOR MATHEW VARGHESE | FILMIBEAT TAMIL
ஏதும் இல்லை

ஏதும் இல்லை

மாவட்ட தலைநகரங்களில் உள்ள முக்கியமான தியேட்டர்களுக்கு அவர் செல்ல இருப்பதாகவும் அங்கு மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் இப்படியொரு பேச்சு பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X