Theri Hindi Remake :பிரம்மாண்டமாக நடந்த தெறி இந்தி ரீமேக் பட பூஜை.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் பட பூஜை இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில், அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என பல வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்த இவர், இன்று பாலிவுட் டாப் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளார். நடிகர் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் படம் செப் 7ஆம் தேதி வெளியாகி கலெக்ஷனை அள்ளியது.

Actor vijay hit movie theri Hindi Remake pooja ceremony

இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனமே மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக ஜவான் படத்தை தயாரித்தது. இப்டபத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி என தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர்களை வைத்தே ஜவான் படத்தை இயக்கி இருந்தார் அட்லீ. இதனால் இப்படம் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்களும் இருந்தது.

ஷாருக்கான் ஜவான்: ஜவான் படம் வெளியாவதற்கு முன் இப்படம் பேரரசு படத்தின் காப்பி என்றும் ஒரு கைதியின் டைரி படத்தின் காப்பி என்றும் செய்திகள் வெளியானது. அதே போல படம் வெளியான போதும், ஜவான் படத்தில் வந்த 23 காட்சிகளும் காப்பி என்று இணையத்தில் ரசிகர்கள் அட்லீயை வெச்சு செய்தார்கள். ஆனால், படம் வெளியான முதல் நாளிலே இந்தியில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்து ரூ. 1000 கோடி கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது. இதன் மூலமாக ஆயிரம் கோடி வசூலித்த படத்தை இயக்கிய இயக்குனர்களின் பட்டியலில் அட்லீ பெயர் இணைந்துள்ளது.

தெறி ரீமேக் பட பூஜை: இந்நிலையில், ஜவான் திரைப்படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று இப்படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் தயாரிப்பாளர் முராத் கேதனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியில் ரீமேக்காக உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன.

சூப்பர் ஹிட் திரைப்படம்: விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான தெறி படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பது மட்டுமின்றி, அவருடைய கெத்து மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கும். அதேபோல, வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன் படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றார். இவர்களின் காம்போ இன்றுவரை ரசிர்கள் மனதில் மறையாமல் நின்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X