நைட் பார்ட்டியில் விஜய்.. கமல், ராதிகாவுடன் செம டான்ஸ்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: இரவு பார்ட்டி ஒன்றில் கமல் ஹாசன், ராதிகாவுடன் நடிகர் விஜய் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வாரிசு படம் பெற்ற கலவையான விமர்சனங்களால் விஜய் ரொம்பவே அப்செட். படம் 300 கோடி ரூபாய் வசூல் என செய்திகள் வெளியானாலும் கதை ரீதியாக படம் பின்தங்கிவிட்டதாகவே விஜய் கருதுகிறாராம். அதுமட்டுமின்றி தனது போட்டியாளரான அஜித் படத்துடன் களமிறங்கி இவ்வாறு பின்தங்கி இருப்பதை விஜய் விரும்பவே இல்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

கம்பேக் கொடுக்க காத்திருக்கும் விஜய்
எனவே விஜய் தனது அடுத்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார். ஏனெனில் மாஸ்டர், விக்ரம் என பிரமாண்ட வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குவதால் இந்தப் படம் மாபெரும் வெற்றியடையும் என்று நம்புகிறார். அதற்கேற்றார்போல் லோகேஷின் வேலைப்பாடுகளும் தரமாக இருக்கின்றன. அண்மையில் லியோ படத்தின் ப்ரோமோவும் வெளியாகி அதனை உறுதி செய்திருந்தது.

சென்னையில் விஜய்; ஷூட்டிங் மும்முரம்
மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட்டுகளை தக்க வைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை பார்த்து பார்த்து செதுக்கிவருகிறாராம். அதற்காகத்தான், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ், மாத்யூ தாமஸ், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியிருக்கிறார். ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் மும்முரமாக நடந்துவருகிறது. அதேசமயம் விஜய் சென்னை திரும்பியிருக்கிறார். இருப்பினும் விஜய்க்கான போர்ஷன் முடிந்துவிட்டதா இல்லை சின்ன ரெஸ்ட் எடுப்பதற்காக வந்திருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

எல்சியூவில் வருகிறதா லியோ
விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி எப்படி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தாரோ அதேபோல் லியோ படத்திலும் லோகேஷ் கனகராஜ் பெரிய சர்ப்ரைஸை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் கைதி படத்தின் கதாபாத்திரங்கள், விக்ரம் படத்தின் கதாபாத்திரங்கள் நடிக்கலாம்; ஏன் கமல் ஹாசனேக்கூட லியோ படத்தில் நடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

நைட் பார்ட்டியில் கமல், விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கமல் ஹாசன், ராதிகா உள்ளிட்டோர் இருக்கும் அந்தப் பார்ட்டியில் இளமை இதோ இதோ பாடலுக்கு கமலும், விஜய், ராதிகா ஆகிய மூன்று பேரும் உற்சாகமாக நடனம் ஆடுகின்றனர். இருப்பினும் அந்தப் பார்ட்டி எதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அதேசமயம் இந்தப் பார்ட்டியை கமல் ஹாசன் ஏற்பாடு செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கமலும், விஜய்யும் நடனமாடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விக்ரமும், லியோவும் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்டனர் என்ற கேப்ஷனோடு அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











