10 ஆண்டுகளாக பிரஸ் மீட்டில் பங்கேற்காததற்கு அந்த ஒரு சம்பவம் தான் காரணம்.. விஜய் பளீச் பதில்!
சென்னை : பத்து ஆண்டுகளாக பிரஸ் மீட்டில் பங்கேற்காததற்கு, அந்த ஒரு சம்பவம் தான் காரணம் என்று நடிகர் விஜய் பதிலளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகளில் சன் பிக்சர்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பீஸ்ட்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர், தீவிரவாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரியாக நடித்துள்ளார் என்பது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.

வரவேற்பை பெற்ற டிரைலர்
இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, டான்ஸர் சதீஷ், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வழக்கமாக விஜய் படங்களின் டீசர், ட்ரெய்லர்களுக்கு இருக்கும் அதே அளவு வரவேற்பு பீஸ்ட் ட்ரெய்லருக்கும் கிடைத்துள்ளது.

விஜய் நேர்காணல்
இந்நிலையில், நடிகர் விஜய் சன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணல் வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நேர்காணலில் பீஸ்ட் இயக்குநர் தொகுப்பாளராக மாறி விஜய்யிடம் பல கேள்விகளை கேட்டு உள்ளார். அதில், பத்து ஆண்டுகளாக நீங்கள் எந்த பிரஸ்சையும் மீட் பண்ணாமல் இருந்ததற்கு ஏதாவது காரணம் இருக்கா என நெல்சன் கேட்க, அதற்கு விஜய் 10 வருடத்திற்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது என்று கூறுகிறார். இத்தனை ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காததற்கு என்ன காரணம் என்பதை இந்த இன்டர்வியூ ஒளிபரப்பான பின்பே தெரிய வரும்.

சர்ச்சையை கிளப்புமா ?
அதே போல நேற்று வெளியான ப்ரோமோவில், வீட்டில் 4 கார்கள் இருக்கும்போது, சைக்கிளில் சென்றது ஏன் என அவர் விஜய்யிடம் நெல்சன் கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு விஜய் என்ன பதில் சொல்லி இருப்பார் என்றும், விஜய் அளிக்கும் பதில் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்துமா என்று தெரிவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











