விஜய்யின் 'பிகிலை' மீண்டும் பார்த்த ராஜபக்சே மகனிடம் 'விஸ்வாசம்' பார்க்க சொன்ன தல ரசிகர்கள்!

By

சென்னை: தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது, இந்த வைரஸ்.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு அண்டை நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும் ஊரடங்கு

இலங்கையிலும் ஊரடங்கு

இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவைப் போல இலங்கையும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்திய நடிகர், நடிகைகள் டிசர்ட் சேலஞ்ச், பில்லோ சேலஞ்ச் போல, திடீர் சேலஞ்ச்களை உருவாக்கி வருவது போல, அங்குள்ள பிரபலங்களும் உருவாக்கி வருகின்றனர்.

நமல் ராஜபக்சே

நமல் ராஜபக்சே

ராஜபக்சே மகனும் இலங்கை எம்.பி.யுமான நமல் ராஜபக்சேவும் ட்விட்டரில் சேலஞ்ச்சை உருவாக்கியுள்ளார். #7DayChallenge என்ற இந்த சேலஞ்சின் 7வது நாளான நேற்று, அவர் பிகில் படத்தைப் பார்ப்பது போல ஒரு போட்டோவை ட்விட்டரில் பதிந்துள்ளார். அருகில் நாய் ஒன்று படுத்திருக்கிறது.

விஜய்யின் 'பிகில்'

விஜய்யின் 'பிகில்'

அதில் நமல் ராஜபக்ச, "7 நாள் சவாலின் கடைசி நாள் இது. பெரும்பாலும் வீட்டில் ரிலாக்ஸாக இருக்கிறேன். எனக்கு எப்போதும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய்யின் 'பிகில்' படத்தை பார்க்கிறேன். இது எனது பேவரைட் படம். அதை மீண்டும் பார்க்கும்போது, மனைவி லிமினி கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒரு அஜித் ரசிகர், அஜித்தின் விஸ்வாசம் படம் பாருங்கள் என்று பரிந்துரை செய்துள்ளார். இன்னொருவர், அவர்களுக்கு அஜித்தை யார் என்று தெரியாது என்று சொல்ல, அங்கும் தொடங்கியது ரசிகாஸ் போர். 'ஒரு ரசிகர் தளபதி விஜய் அண்ணா படங்கள் எப்பவும் சிறப்புதான். நீங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X