வந்துடுச்சு.. பிகில் அப்டேட் வந்துடுச்சு..பிகில் படத்தில் விஜய் குரலில் வெறித்தனம்!
சென்னை: பிகில் படத்தின் அப்டேட் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறிய அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லி மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். நடிகர் விஜய்க்கு இது 63வது படமாகும். பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 21ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாயின.
இதன் மூலம் விஜய் பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.இதில் விஜய் ஃபுட் பால் கோச்சாகவும், நயன்தாரா ஃபுட்பால் பிளேயராகவும் நடிக்கின்றனர். பிகில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

ஆச்சரியப்படும் அறிவிப்பு
இந்நிலையில் பிகில் படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது பிகில்' படத்தின் சிங்கிள் டிராக், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் ஆச்சரியப்படும் ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

கதறிய டிவிட்டர்
இதனால் காலை முதலே காத்திருந்தனர் ரசிகர்கள். மேலும் அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்றும் டிவிட்டரை கதறவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

பிகிலில் பாடுகிறார் விஜய்
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த அப்டேட்டை வெளியிட்டார் படத்தின் புரடியூசாரான அர்ச்சனா கல்பாத்தி. அதாவது, அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடல் ஒன்றை பாடுகின்றார்.
வெறித்தனம்
வெறித்தனம் எனத் தொடங்கும் பாடலை விஜய் பிகில் படத்தில் தனது சொந்த குரலில் பாடுகிறார். இதற்காக விஜய் ரசிகர்களாகிய நமது சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. ஸ்டுடியோவில் விஜய், பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.


Click it and Unblock the Notifications











