twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகில் அப்டேட்: விஜய் கடுமையான உழைப்பாளி... ரொம்ப திறமையானவர் - ஜேமி நைட்

    |

    Recommended Video

    Bigil Official Trailer | Thalapathy Vijay | Nayanthara | Atlee | AGS

    சென்னை: நடிகர் விஜய் மிகவும் திறமையானவர். ஒரு கால்பந்து வீரருக்கான அனைத்து அம்சங்களையும் எளிதில் மிக விரைவாக கற்றுக்கொண்டுவிட்டார். அதே சமயத்தில் அதற்காக அவர் கடுமையாக உழைத்தார் என்று இவருக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்த ஜேமி நைட் கூறினார்.

    அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய், நயன்தாரா ஜோடியில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் பிகில். படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்ட உடனேயே ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் வாரி குவித்து சாதனை படைத்து வருகிறது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    Actor Vijay is talented person - Football Coach


    இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் வயதான ரவுடி கெட்டப்பிலும், பெண்களுக்கான கால்பந்து கோச்சாகவும் பிண்ணி பெடல் எடுத்திருக்கிறார். விஜய் தனது கால்பந்து அணியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை இந்துஜா.

    இந்துஜா பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பல முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளையும் தட்டி கழித்துள்ளார்.

    ஒரு கால்பந்து வீரருக்கான அனைத்து அம்சங்களையும் மிக விரைவாக கற்றுக்கொண்டுவிட்டார் விஜய் என்று கூறியுள்ளார் அவருக்கு கால்பந்து பயிற்சியாளராக இருந்த ஜேமி நைட். ஜேமி நைட் உலகின் தலைசிறந்த கால்பந்து ஃப்ரீஸ்டைலர்களில் ஒருவராவார்.

    அவர் நடிகர் விஜய்க்கு பல கால்பந்து நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார். ஜேமி நைட் விஜய் பற்றி கூறுகையில், நடிகர் விஜய் மிகவும் திறமையானவர், அவர் எளிதில் கால்பந்து ட்ரிக்ஸ்களை கற்றுக்கொண்டார். அதே சமயத்தில், அதற்காக அவர் கடுமையாக உழைத்தார், என்று தெரிவித்துள்ளார்.

    விஜய் மட்டுமின்றி அவரது கால்பந்து அணியில் நடித்த பெண்கள் கூட்டணியும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களின் பங்கும் இன்றியமையாதது.

    இந்துஜா வெளியிட்ட கால்பந்து கூட்டணி புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாட வைத்துள்ளார் விஜய். படத்தில் அத்தனை அம்சங்களும் வெறித்தனமாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்னரே சூப்பர் ஹிட்டாகி விட்டன.

    படத்தில் சண்டைக்காட்கள்சி, கால்பந்தாட்டம், ஓல்ட் கெட்டப், விஜயின் ஹஸ்கி வாய்ஸ், ரொமான்ஸ் சீன், சென்டிமென்ட் சீன் என அனைத்திலும் மாஸ்ஸாக நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் விஜய். படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி வெறித்தனமாக ரசிகர்களை தாக்கினால் அவர்கள் என்னாவார்கள் தளபதி.

    English summary
    Actor Vijay is very talented. He has learned all the features of a football player easily. At the same time, he worked hard for it, said, Jamie Knight, Football Coach for Vijay in Bigil Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X