மாஸ்டர் செம ஹிட்டாகும்.. இல்லன்னா நான் பணம் தர்றேன்.. தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கொடுத்த விஜய்!

சென்னை: மாஸ்டர் படம் பெரும் வெற்றி பெரும் என நடிகர் விஜய் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Exclusive: Master official Release date | Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடித்திருக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் நிறைவடைந்து விட்டன.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

கடந்த 9ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா பெருந்தொற்றால் தள்ளி போயுள்ளது. மாஸ்டர் படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பது இதுவே முதல் முறை.

நஷ்டத்தை ஏற்கிறேன்

நஷ்டத்தை ஏற்கிறேன்

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து நடிகர் விஜய் தயாரிப்பாளரிடம் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாஸ்டர் படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ள விஜய், அப்படி வெற்றி பெறாவிட்டால் தயாரிப்பாளரின் நஷ்டத்தை தானே ஏற்பதாகவும் விஜய் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.200 கோடிக்கு வணிகம்

ரூ.200 கோடிக்கு வணிகம்

ஏற்கனவே எம்.ஜி. எனும் குறைந்தபட்ச உத்தரவாதம் என்ற அடிப்படையில் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே 'மாஸ்டர்' படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எம்ஜி பயன்முறையில் படத்தை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

பணம் தருவதாக உறுதி

பணம் தருவதாக உறுதி

ஆனால் விநியோகஸ்தர் அமைப்பின் கீழ் 'மாஸ்டர்' படத்தை வெளியிட ஒப்புக் கொண்ட தளபதி விஜய், படத்தின் வெற்றி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதால், ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால் தயாரிப்பாளர்களுக்கு பணம் தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

லாபம் மற்றும் இழப்பு இரண்டும் எம்.ஜி சிஸ்டத்தின் கீழ் விநியோகஸ்தரால் ஏற்கப்படுகின்றது. ஆனால் விநியோகஸ்தர் அமைப்பின் கீழ், படத்தின் இழப்பு அல்லது லாபத்திற்கு தயாரிப்பாளர் பொறுப்பேற்கிறார். மேலும், விநியோகஸ்தர் அமைப்பின் கீழ் விஜய் திரைப்படம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X