நடிகர் விஜய் இப்போ எங்க போயிருக்கார் தெரியுமா?
Recommended Video

விஜய் எங்கே போறார் தெரியுமா?| சினேகனை தவறாக பேசும் சுஜா-வீடியோ
சென்னை : 'பைரவா' படத்தை அடுத்து விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மெர்சல்'. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நேற்று நிறைவடைந்தன.
படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி படக்குழுவினருடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விஜய் இன்று இந்தியாவை விட்டு பார்சிலோனாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

சென்னையிலிருந்து துபாய்க்குச் சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார். விஜய்யின் குடும்பத்தினர் ஏற்கெனவே பார்சிலோனாவுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெர்சல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ரிலீஸுக்கு முன்பு விஜய் இந்தியாவுக்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு முருகதாஸ் படத்தில் நடிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











