மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங்கில் இணைந்த விஜய்.. நெய்வேலியில் பரபரப்பாக நடக்குது ஷூட்டிங்!

Recommended Video

Money Ceased from Thalapathy Vijay Home | AGS Entertainments | Master Shooting

சென்னை: நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் மீண்டும் நடிகர் விஜய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமான வரித்துறை சோதனை காரணமாக நேற்று முன் தினம் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

நடிகர் விஜய் இல்லாமல் நேற்று, விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மாஸ்டர் ஷூட்டிங்

மாஸ்டர் ஷூட்டிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்து, தற்போது சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

திடீர் ரெய்டு

திடீர் ரெய்டு

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தொடங்கிய ரெய்டு, திடீரென நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தது. இதனால், நேற்று முன் தினம் ஷூட்டிங் தடை பட்டது.

24 மணி நேரம்

24 மணி நேரம்

நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகள் இருக்கும் நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், பனையூர் வீட்டில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் நடிகர் விஜய்யிடம் பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

குட்டிக் கதைக்கு வெயிட்டிங்

குட்டிக் கதைக்கு வெயிட்டிங்

இந்நிலையில், தளபதி விஜய் இதுகுறித்து பிரஸ் மீட் எதாவது கொடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது ரசிகர்களே மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சில் இதுகுறித்து குட்டி கதை சொல்லி விஜய் செம்ம மாஸாக ஸ்பீச் கொடுப்பார் என ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மீண்டும் ஷூட்டிங்கில்

நேற்று முன் தினம் வருமான வரித்துறை அதிகாரிகளின் வருகையால், தடைபட்ட மாஸ்டர் பட ஷூட்டிங், நேற்று விஜய் இல்லாத போர்ஷன்களை படமாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஃப்ரீ புரொமோஷன்

ஃப்ரீ புரொமோஷன்

கடந்த இரு தினங்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவில், நடிகர் விஜய்யிடம் இருந்து எந்த ரொக்கமும் கைப்பற்றப் படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த ஐடி ரெய்டு மாஸ்டர் படத்துக்கு ஃப்ரீ புரொமோஷனாக அமைந்துள்ளது என தளபதி ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X