விஜய் ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்.. பிறந்தநாளோட சேர்த்து இதையும் கொண்டாட ரெடியா?

சென்னை : நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார்.

வரும் 22ம் தேதி நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி தளபதி 66 மற்றும் தளபதி 67 பட அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

நடிகர் விஜய் எப்போதுமே மாஸ் ஹீரோ தான். தமிழில் முக்கியமான ஹீரோவாகவும் ஏராளமான ரசிகர்களின் தளதியாகவும் இவர் காணப்படுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை குவிக்க தவறவில்லை. ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

Recommended Video

Thalapathy 66 படத்தின் First Look, Title Release எப்போ தெரியுமா? *Kollywood | Filmibeat Tamil
தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. குடும்ப சென்டிமெண்ட் படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

நாளை டைட்டில் வெளியீடு

நாளை டைட்டில் வெளியீடு

படத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைய ஏராளமான விஷயங்கள் உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி முந்தைய தினம் மாலை டைட்டில் வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இதையடுத்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இணையவுள்ளார். இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ப்ளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விஜய்யை இந்த கேரக்டரில் பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

தோனியுடன் கைக்கோர்க்கும் விஜய்

தோனியுடன் கைக்கோர்க்கும் விஜய்

இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புரொடக்ஷனில் விஜய் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, தற்போது ஐபிஎல்லில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஓகே சொன்ன விஜய்

ஓகே சொன்ன விஜய்

அந்த வகையில் திரைத்துறையிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு மொழியிலும் சில டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க இவர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து விஜய்யுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ப்ராஜக்ட்டுக்கு ஓகே சொன்ன விஜய், தற்போது கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டே இந்தப் படத்தில் நடிக்க முடியும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில விளம்பரப் படங்களில் நடித்துள்ள தோனி, இந்தப் படத்தில் நடிப்பாரா என்றும் ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்தால் விஜய் -தோனி காம்பினேஷன் ரசிகர்களுக்கு பெஸ்ட் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X