இது என்ன புதுக்கதை.. கேஜிஎஃப் இயக்குநருடன் இணைகிறாரா விஜய்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் விஜய் கேஜிஎஃப் இயக்குநரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா என மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

தற்போது தனது 65வது படத்தில் நடிக்கிறார் விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

கேஜிஎஃப் பார்ட் 2

கேஜிஎஃப் பார்ட் 2


இந்நிலையில் கே.ஜி.எப் படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீலுடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் பிரசாந்த் நீல்.

நடிகர்கள் ஆர்வம்

நடிகர்கள் ஆர்வம்

தற்போது பிரபாஸை வைத்து 'சலார்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேஜிஎஃப் படத்தின் வெற்றியையும் பிரமாண்டத்தையும் தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்ற முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வமாய் உள்ளனர்.

கோடிகளில் பிஸ்னஸ்

கோடிகளில் பிஸ்னஸ்

இந்நிலையில் தமிழில் கோடிகளில் பிஸ்னஸ் கொடுத்து வரும் நடிகர் விஜய், பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எந்தளவுக்கு உண்மை?

எந்தளவுக்கு உண்மை?

மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் தகவல் றெக்கை கட்டி பறந்து வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து இரு தரப்பில் இருந்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X