விஜய்யின் தளபதி 66 படம் குறித்து வெளியான அசத்தல் அப்டேட்.. ட்ரென்ட் செய்து கொண்டாடும் ரசிகர்கள் !

சென்னை: விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது.

இந்நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

பூஜா ஹெக்டே ஜோடி

பூஜா ஹெக்டே ஜோடி

இந்தப் படத்தின் ஷுட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் பரவி வருகிறது. தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

உறுதிப்படுத்தவில்லை

உறுதிப்படுத்தவில்லை


மேலும் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் படக்குழு படம் குறித்த எந்த தகவலையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே மெர்சலில்

ஏற்கனவே மெர்சலில்

இந்நிலையில் விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் உடன் ஏற்கனவே மெர்சல் படத்திற்கு இணைந்து பணியாற்றியுள்ளார் விஜய்.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

தற்போது மீண்டும் தேனாண்டாள் ஃபிலிம்ஸுடன் இணைய உள்ளார் விஜய். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் #Thalapathy66 என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப் 2ல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X